உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

அவர்களோடு நிரந்து விடுவேன்; இனிது சொல்வேன்; அவர்கள் என்னவர் ஆவர்; நானோ அவர்களுக்கு அன்னவர் ஆவனே! அந்நிலையில் வெற்றி பெறுதல் என்னது மட்டும் இல்லை. அவர்கள் பணிப்பேறே அது என்றும், தோற்றால் அவர்கள் பங்கும் உண்டு என்றும் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆதலால், வெள்ளப் பெருக்குப் போலப் படைபடையாய் வரும் தடைகளும் உடையுடைபட்டு ஒதுங்கி ஒழிந்துபோம்!'

வெற்றியில் நான் இல்லை!

தோல்வியிலும் நான் இல்லை!

வெற்றியிலும் நாம்!

தோல்வியிலும் நாம்!

வினை மேற்கொண்ட எனக்கு, 'நான்' மட்டுமா இல்லை! ‘எனது' என்பதும் அற்று விட்டது! எல்லாம் நாம்! எல்லாம் நம்முடையவை.

பாரம் எவர்மேல் விழும்? தாங்குவார் மேலேயே விழும்! போர்க்களத்தில் மட்டுமா? ஏர்க்களத்தில் மட்டுமா? சொற் களத்தில் மட்டுமா? இல்லை இற்களத்திலும் அப்படியே!

"போற்றின் அரியவை போற்றல்"

"செயற்கு அரிய செய்தல்"

"செயற்கு அரிய யாவுள?"

"பொருள் கருவி காலம் வினை இடனோ டைந்தும் இருள் தீர எண்ணிச் செயல்'

இம் மணிமொழிகளும் இன்னவையும் என் ஊக்கிகள்! உந்துமுனைகள்!

செயல் அல்லது வினை அல்லது தொழில் என்னும் ஏறு (காளை) கொம்பு நிமிர்த்தி, திமில் எடுத்து, வால் தூக்கி, கால் பாய்ச்சலிட்டுத் தோற்றத்தாலேயே தொடை நடுங்கி விழுமாறு தாக்க வருகின்றது!

"இடுக்கண் வருங்கால் நகுக

என்னும் நன்மொழி முன்நிற்கிறது!

வெற்று நகையா? வெட்டி நகையா?