உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

191

ஆளாகப் பிறந்தும், வளர்ந்தும், வாழ்ந்தும் வினையாற்ற மாட்டாதார், ஆள் அல்லர்! அவர் பழிப் பிறவி! வீட்டுக்கும் நாட்டுக்கும், கேட்டு (தீங்கு)ப் பிறவி! இது வள்ளுவ நோக்கு!

எடுத்துக் கொள்ளும் செயல்களில் சில எளிதில் நிறை வேறும்; சில அரிதில் நிறைவேறும்; அரிதில் நிறைவேற்றலும் அரிதாக இருக்கும் செயலும் உண்டு. அதனை நோக்கி “இதனை எம்மால் நிலைவேற்றல் அரிது எனச் சோரல் வேண்டா? இதனை எளிதில் நிறைவேற்றினார் துணிந்தும் முனைந்தும் நிறை வேற்றினார் இலரா? அவர் கொண்ட முயற்சி துணிவு முனைப்பு உனக்கு மட்டும் இல்லாமலா போய்விடும்?

-

இடைவிடாது எப்படி முயன்றார்?

இடைத் தடைகளை எப்படி வென்றார்?

இவர்க்கு முன் வெற்றியடைந்தார் எவ்வழியைப் பற்றிக் கொண்டு முன்னேறினாரோ அவ்வழியை அவர் பற்றிக் கொண்டது போல நீயும் பற்றிக்கொண்டு வெல்லலாமே!

வெற்றி என்பது இவர்க்கே எனப் பட்டயம் தீட்டி வைத்த ஒன்றா?

துன்பத்திற்குத் துன்பம் செய்ய வல்லாரைத் துன்பம் என்ன

செய்யும்?

இடுக்கணை இடுக்கண் செய்வார்க்கு இடுக்கண் என்ன செய்துவிட முடியும்?

'இன்பம் வேண்டும்' என்று எச்சில் ஊறிக்கிடப் பவர்க்குத் தானே, துன்பத்தின் வாலாட்டம் உண்டு!

“துன்பமே எனக்கு இன்பம்”, “எட்டியே எனக்குக் கற்கண்டு. அத்தேர்ச்சி எனக்கு இல்லை, என எனக்குத் தோன்றினால், அத்தேர்ச்சியாளரைக் கொண்டு நிறைவேற்றும் ஆற்றல் எனக்கு

உண்டு!”

"என் செயலுக்குக் குறுக்கீடு இருவரால் நிகழ்கின்றதா? அவருள் ஒருவரை நட்பாக்கிக் கொண்டு வெற்றியைக் கைம்மேல் கொள்ளத் தெரியும் எனக்கு!

“சுற்றத்தார் சுற்றி நிற்கும் பேறு எனக்கு உண்டு!"

"என் உடனாளர் உதவிக்குத் தடையில்லை; ஏன்? அவர்கள் வேறு, நான் வேறு என ரண்டாக இருப்பதில்லை!