உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

195

காலத்தை ‘ஊழி' என்கிறார். “ஊழி பெயரினும் தாம் பெயரா” உரவோரையும் எடுத்துக் காட்டுகிறார்.

ஊழ் என்பதன் பொருளை இரண்டு இடங்களில் “உலகத்து இயற்கை" எனத் தெளிவிக்கிறார், எவ்வெவரும் உலகியற்கை அறிந்து வாழவேண்டும் என்பதுடன் ஆட்சியின் கண்ணாக விளங்கும் அமைச்சர்க்கு அவ்வறிவு மிக இன்றியமையாதது என்பாராய்ச்”

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்”

என ஏவினார்.

(637)

உலகத்து இயற்கையாவது எது என்பதைத் தெளியின், வள்ளுவர் கொண்ட ஊழ் விளக்கம் தெளிவாம்.

ஒருவர் ஆணைக்கோ வேண்டுதலுக்கோ உட்படாமல் தன் இயல்பில் நிகழ்கின்ற இயல்பே 'ஊழ்' என்னும் உலகியற்கை

யாம்.

இணரூழ்த்தலை வள்ளுவர் சொல்லிய தறிந்தோம். ‘கனியூழ்த்தல்' எனப் பல இடங்களில் வருகின்றன.

மேலும் மலர்தல் அலர்தல், முதிர்தல், முற்றல், உதிர்தல், பதன்கெடல், பொருந்துதல் என்னும் பொருள்களில் ஊழ் வருகின்றது. இவை இயற்கையின் இயல்புகள் தாமே.

ஒருவர் அரசன் மகனாகப் பிறக்கிறார். அவர்க்குத் தந்தையின் அரசுரிமை இயல்பாக வருகின்றது. அதனை ஊழின் எய்தியதாக இலக்கியம் கூறுகின்றது.

ஓர் உரலில் இருவர் மாறி மாறி உலக்கை போடுகின்றனர். அதனை ‘ஊழ் ஊழ்' என்னும் இலக்கியம். இவற்றில்,

'ஊழ்' என்பது முறைமை என்பதையும்,

ஊழ் ஊழ்' என்பது முறை முறையே என்பதையும் குறிப்பனவாம். இவற்றால் ஊழ் அல்லாதது 'ஊழல்' ஆயது. முறைகேடு என்பது தானே பொருள். ஆகவே மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் ஊழ் என்பதற்கு இயற்கை, இயற்கை முறைமை என்னும் பொருள்களே பண்டு தொட்டு இன்று வரை வழக்கொழியாமல் வழங்குகின்றமை புலப்படும்.