உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 40 ஓ

ஆக்கம் செய்யும் இயற்கை, கேடு செய்யும் இயற்கை என்னும் இரண்டையும் ஆகூழ் என்றும், போகூழ் என்றும் திருவள்ளுவர் வழங்குவார். அதற்கு எடுத்துக்காட்டுக் காட்டுவார் போலக்.

வை,

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குக் சார்வாய்மற் றாங்கே

""

எடுப்பதூஉம் எல்லாம் மழை”

(15)

என்பார். கண்ணாரக் காணும் காட்சிகள் அல்லவோ

66

“காய்ந்து கெடுப்பது மழை

பேய்ந்து கெடுப்பதும் மழை”

என்னும் மொழி, பெருமொழி ஆயிற்றே! ஊர் ஊராக வாழ வைக்கும் மழை வெள்ளம் தானே, ஊர் ஊராக ஓடவும் வைக்கின்றது.

பெய்யுங்கால் பெய்து பெருநலம் செய்வதால் தானே,

"முறைவேண்டு பொழுதில் (நீதி வேண்டும்போது) அதனைப் பெற்றோர் உறை வேண்டுபொழுதில் (மழை வேண்டும் போது) அதனைப் பெற்றார்" என்று புறநானூற்றிலும்,

“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்"

என்று வள்ளுவத்திலும் பேசப்படுகின்றன.

'ஆறிடும் மேடும் மடுவும்' எவர் அறியார்?

<<

(1192)

“ஆற்றங் கரை மரம்" ஆற்றோடு போவதை எவர் காணார்?

முல்லையை ஆறு, மருதம் ஆக்குவதில்லையா?

மருதத்தை ஆறு, நெய்தல் ஆக்குவது இல்லையா? கம்பரின் ஆற்றுப்படலம் அருமையாய் விரிக்கின்றதே!

"புயல் மையம் கொண்டுள்ளது'

"தொடர்ந்து இருபத்து நான்கு மணிநேரமும் அடைமழை" "மீனவர் கடலுள் செல்லுதல் ஆகாது

""

என்றெல்லாம் தொலைக் காட்சி, வானொலி விழிப் புறுத்தம் செய்வன ஊழ் அறிவிப்புத்தானே!

நிலநடுக்கம் எரிமலை கக்கல் என்பவற்றை முன்னரே நாடறியச் செய்யும் அறிவியல் அறிவிப்பு ஊழின் அறை கூவல் தானே!