உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

ளழ் இவ்வளவில் அமைவதாக!

நீரின் ஊழியல் என்ன? பள்ளம் நோக்கி ஓடல்? தீயின் ஊழியல் என்ன? மேல் நோக்கி எழுதல்! காற்றின் ஊழியல் என்ன! வட்டமிட்டுப் பரவல்!

197

நீரை மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றுகிறோம் இல்லையா? பறக்கச் சிறகில்லாத நாம் வானத்தில் பறக்கிறோம் இல்லையா?

கடலுள் மூழ்கி முத்துக் குளித்தலும், நீர் மூழ்கி வழியே செல்லலும் நிகழ்கின்றனவே!

இவை என்ன? ஊழை வெல்லுதல் அல்லவோ!

தொட்டியில் ஏற்றப்பட்ட நீர், குழாயைத் திருகி அடைப்பு நீக்கிய அளவில் அல்லது கசிய வாய்ப்போ துளையோ உண்டாய அளவில் ஒழுகிக் கீழே வழிகின்றதே!

பறக்கும் வானூர்தியில் ஒரு பறவை மூக்கால் துளையிட்டு விட வீழ்ந்து படுகின்றதே! எத்தனையோ கப்பல்கள் துளைகளில் நீரேறி மூழ்கிப் போகின்றனவே! வை ஊழ் கொண்ட

வெற்றிகள் அல்லவோ!

ஊழை நாம் வெல்லலாம்?

ஊழ் நம்மையும் வெல்லும்!

ஆயிரம் பேரை எழுப்பி, நடையிட விட்ட அருமை மருத்துவரும் ஒரு நாள் ஆராலும் எழுப்ப முடியாதவராய் ஆகிவிடுகிறார். அல்லரோ?

ஊழை நாம் வெல்லலாம்! ஒருமுறை இல்லை பன்முறை கூட! ஊழையும் தோற்கக் கண்டு மகிழலாம்! அம் மகிழ்ச்சி நிலையானதன்று. நிலையான இறுதி வெற்றி ஒரு நாள் ஊழுக்கே உண்டு!

இந்த இரண்டையும் எப்படிச் சொல்வது? வள்ளுவர் வழிகண்டார்!

காட்டினார்!

“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்"

(620)

என்று, முயற்சியின் வெற்றியை முழங்கிய அவர் நாவே,