உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்"

(380)

என்று ஊழின் வெற்றியை உரத்துக் கூறியது!

முயற்சியாளன் ஊழின் வெற்றிப் பாட்டினை எண்ணி உள்ளம் சோர்ந்து விடல் ஆகாது அன்றோ!

அவன் சோர்வு உலகச் சோர்வு ஆகிவிடும் அன்றோ! அதனால்,

“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய்வருந்தக் கூலி தரும்”

என்றார். தெய்வமாவது ஊழ்! உலகியற்கை!

(619)

வெள்ளத்தைத் தடுத்துப் பாதுகாத்துப் பயிர்க்குப் பயன் படச் செய்வதும், மின்னாற்றல் எடுப்பதும் ஊழை அடிப்படுத்தி ஆக்கங்கொள்ளும் வழி!

பெருங்கட்டடத்தில் இடிதாங்கி பொருத்துவது ஊழை வெல்ல மேற்கொள்ளும் ஏற்பாடு!

செருப்புப் போடுதலால் வெப்பினைத் தடுப்பதும், குடை பிடிப்பதால் மழையீரம் தாக்காமல் தடுப்பதும் காலத்துக் கேற்ற உடையணிந்து உடலைக்காப்பதும் ஆகியவெல்லாம் - நாம் ஒவ்வொருவரும் நாளும் நாளும் செய்வன எல்லாம் - ஊழை வெல்லும் முயற்சிகளே!

எனினும் “நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேளலறச் சென்றான்' என்பதோ ஊழ் கொண்ட வெற்றியாம்!

“ஊழை வெல்க! பல்காலும் பன்முறையும் வெல்க!

ஊழ் வெல்லுங்காலும், உலகியல்பு அதுவே என அமைக” என்பதே,

"உறங்குவது போலும் சாக்காடு" என்பதும்,

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே" என்பதுமாம்! வள்ளுவரின் ஊழ் நோக்கினை உள்நோக்கி அறிவார்,

ஓயாது உழைப்பார்! சாயும் பொழுதும் சஞ்சலம் இன்றி மலர் உதிர்வது போலச் சாய்வார்!