உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

இம்மூன்று அதிகாரங்களிலும் முகக்குறி, கட்குறி, சொற்குறி என்பனவெல்லாம், அகக்குறி அறிகருவியாய் உளவியல்' உரைப்பன அல்லவோ!

இவை, ஒருவர் உளத்தை ஒருவர் பயின்று செயல்படுதற்கு அமைந்த அறிபொறிகள் அல்லவோ!

தாம் வேண்டுவாரின் குறிப்புக் காண்டலை அன்றித், தொழில் முறையால் குறி கூறுவனவா இவை?

காலம் அறிதலில் நம் காலம் அது; அல் காலம் இது; ஆம் பொழுது இது; ஆகாப் பொழுது இது; என நாள் கோள் பற்றிய குறிப்புகள் உளவா?

தெரிந்து செயல் வகை (47)

வலியறிதல் (48)

காலம் அறிதல் (49)

இடன் அறிதல் (49)

தெரிந்து தெளிதல் (51)

தெரிந்து விளையாடல் (52)

என்னும் அதிகார வைப்பு முறையே, ஒரு செயலைச் செம்மையாகச் செய்து முடிக்கத் தக்க வழிவகைகளைக் கூறுவனவே அவை; கணியம் பற்றியவை அல்ல என்பதைக் காட்டுமே!

காலம் அறிதலில் கூகை, காக்கை, தகர் (ஆட்டுக்கடா), கொக்கு என்பவற்றைக் காட்டியல்லவோ பொழுது, செயல் விரைவு, செயல் சோர்வு, உளத்திண்மை, பின்வாங்கி முன்னேறல் என்பவற்றை விளக்கினார். அவை கணியமா?

இன்ன மாதம், இன்ன கிழமை, இன்ன நேரம் செயலுக்கு உரியது; உரியது அல்லது என்ற குறிப்பு ஆங்கு உண்டா?

இடம் அறிதலில் முதலையின் இடவலிமை காட்டினாரே! நரிக்கு யானையை விழ்த்தும் இடமும் உண்டு என்றாரே! கப்பல் செல்லும் இடம் உரைத்தாரே! தேர் செல்லா இடம் உரைத்தாரே!

அவரவர் உறைவிடம், அயலிடம் ஆயவற்றை உரைத்து ஆக்கமும் அழிவும் காட்டினாரே!