உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

"தோன்றில் புகழொடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலில் தோன்றாமை நன்று'

""

(236)

205

என்பது பிறப்பியம் பற்றியது ஆகுமா? 'பிறந்தால் புகழொடு பிறக்க' எனப் பேசினாரா பொய்யா மொழியார்?

பிறப்பு, இறப்புகளைக் கருநிலையில் பெற்றோர் அறிவரா? பிறப்பார் அறிவரா?

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது”

66

"வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்

தானறி குற்றப் படின்”

இவை பிறப்பினவா?

உட்பகை தோன்றுவதையும் (884, 885)

என்பது,

66

(124)

என்கின்றாரே!

(272)

என்கிறாரே!

தும்மல் தோன்றுவதையும் (1254) கூறுகிறாரே! தோன்றுக ஒரு செயற்பாட்டில், ஒரு பொறுப்பில், ஒரு கடமையில், ஓரவையில் தோன்றின் புகழுண்டாகத் தோன்றுக; "முடியாதா ஆங்குத் தோன்றாமல் இகுந்து தோன்றுதற்கு வேண்டும் முயற்சிகளில் முனைக” என்னும் பொருளதாதலை முன்னும் கண்டுளோமே!

ஊழும், வினையும் தலைவிதிப் பொருளில் திருவள்ளுவர் சொல்லாமை போலவே, கணியர் கூறும் பிறப்பியம் நாள்கோள் ஆளுகை ஆகியவற்றையும் கூறினார் அல்லர்!

காலம் அறிதல், இடம் அறிதல்; குறிப்பறிதல் என்றெல்லாம் கூறியுள்ளாரே எனின், இவற்றொடு, அவையறிதல், ஒப்புர வறிதல், செய்ந்நன்றி அறிதல், வலியறிதல் என்பவற்றையும் அறிதல் வகையாகச் சொல்லியுள்ளாரே அல்லவோ!

குறிப்பறிதல் என்பது பொதுவாழ்வில் கொள்ள வேண்டுவனவும், குடும்ப வாழ்வில் கொள்ள வேண்டுவனவும் ஆகிய குறிப்புகள் தனித்தனி இருத்தலால் பொருட்பாலில் ஒன்றும், இன்பத்துப் பாலில் ஒன்றுமாக அமைத்தாரே! அம்மட்டோ! இன்பத்துப் பாலில் குறிப்பறிவுறுத்தல் என்றும் அமைத்தாரே!