உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. காலமறிதல்

ஒருவர் பிறந்த நேரத்தைக் கொண்டு 'பிறப்பியம்' (சாதகம்) வரைவதைப் பரிசுச் சீட்டுப் பெரு விருப்பினும் பெருவிருப்பாகப் பலரும் செய்வதைக் காண்கிறோம்.

‘குறி' என்பது இலக்கணம் என்ற நிலைமாறி, தொடு குறி, எண் குறி, மச்சக்குறி, உறுப்புக் குறி, வரிக் (இரேகை) குறி, நட்ட குறி எனப் பலவாகப் பார்த்தலைக் காண்கிறோம்.

கிளிச்சீட்டு, பல்லி ஒலி, பறவை ஒலி, பூனைச் செலவு, சொகினம் (சகுனம்) திக்குமாறு (சூலம்) இன்னவும் பெருவரவாக உள்ளன.

கணியரைக்

கேளாமல் நல்லதாகத்

தெரிந்தாலும் அப்பெயரை வைப்பதில்லை. மொழிக்கேடாக - மரபுக்கேடாக - என்ன ஆயினும் கணியர் கூறிய வகையில் அமைத்துக் கொள்வதே அமைப்பெனப் பலரும் கொள்கின்றனர்!

பூக்கட்டிப் பார்த்தலும், கயிறிட்டுக் காணலும். உருவிலி (அசரீரி)ச் சொல் கேட்டலும், மருள், ஆவலிப்பு (ஆவேசம்) உரை கேட்டலும், உடுக்கடி, குடுகுடுப்பை, இராப்பாடி சொற்கேட்டலும் நிகழ்ந்து வருதலை அறியவே செய்கிறோம். நம்பிக்கையாம் மூலப்பொருளைக் கொண்டு நடையிடும் இவற்றைப் பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளாரா?

அவர் காலத்தில், நாள் மீன் கோள் மீன் பற்றிய தெளிவு நன்றாகவே இருந்தது. "வையத்தின் வானம் நணியது உடைத்து.” என்று அவரேகூறுகிறார். வானியலை ஐயத்தின் நீங்கித் று தெளிந்தார் இருந்ததைச் சுட்டுகிறார். புறநானூற்றில் வானியல் இயக்கம் பற்றிய செய்திகள் பல உண்டு! வான் வீழ் கொள்ளி வீழ்ச்சியும் விளைவும் சொல்லப்பட்டுள. ஆயினும் பிறப்புக்கும்- இறப்புக்கும் - நலத்துக்கும் - கேட்டுக்கும் வறுமைக்கும் - வாழ்வுக்கும் திருவள்ளுவர், நாள் கோள்களை எவ்விடத்தேனும் தொடர்பு காட்டியுள்ளாரா? இல்லையே!

-

-