உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

203

செயலின் வெற்றி என்பது ஊக்கத்தின் வெற்றியே. (670) நல்லினத்தொடு சேர்ந்தால் மனந்தூய்மையும், செயல் தூய்மையும் உண்டாம். (455)

இன்ன இன்ன வகைகளில் எல்லாம் செயல் சிறக்கும் வழிகளைச் செம்மாந்துரைத்தவர் செந்நாப்போதார்.

தமிழ் இலக்கணரோ தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, ஏவல் வினை, குறிப்பு வினை, தெரிநிலை வினை, வினை எச்சம், வினை முற்று என வினை நிலையைத் தனி இயலாகவே விரித்துரைத்தனர்!

இவ்வாறாகவும், வள்ளுவர் காட்டாத வினை, விதி என்பவற்றை அவர் நூலில் உள்ளதாகக் காட்டுவதில் என்னதான் நலமோ, என்னதான் நிறைவோ?

கடந்த வினையைக் காட்டி, நடைபெறும் வாழ்வை நலிப்பது நன்னெறி அன்றாம்! முற்பகல் செய்யும் செயற்பயன் பிற்பகல் விளைந்து விடும் என்பதை, அடுத்த பிறவிக்கு ஆக்குவானேன்! அது வருந்தவோ திருந்தவோ ஆகுமா? (655)

இப்பிறப்பில் செய்யும் குற்றத்திற்குத் தண்டனை, அடுத்த பிறப்பில் இயலும் என்பது, ஆளும் இறையியலுக்கும் ஆகுமா? அவ்வாறு ஆகாதது, இறைவன் இயல் என்று கூறலாமா? அப்பன் குற்றம் அவனை விட்டு அவன் மகனுக்கு ஆக, அரசுச் சட்டமும் இல்லையே! அறச்சட்டம் அவ்வண்ணம் ஆகுமா?

முற்பகல் வினைக்குப் பிற்பகலே விளைவு உண்டு என்பதை எண்ணிய அறிஞர் ஒருவர், முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி 'ஒரு நொடி' என்றாரே! எத்தகு அருமை அது!

66

"வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து”

(1268)

என்னும் திருக்குறள் தலைவி விருந்து வாழ்த்தே, தெய்வப் புலவர் வினை என்னும் வாழ்த்து நோக்காம் என வாழ்த்தி,

வினைநல வீறு பெறுவோமாக!