உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள்

தம் தம் வினையான் வரும்"

என்னும் பொய்யில் புலவர் மொழியும் எண்ணத் தக்கன.

தீவினைக்கு மாறானது நல்வினை; அறவினை என்பதும் அது, அறத்திற்கு மாறான வினை பிறவினை; அஃது அஞ்சும் வினை, அவா வினை, நன்றாகா வினை, நன்றிபயவா வினை, பழிவினை எனப்படும்.

மடி என்னும் சோம்பல் அவனையும் அவன் குடியையும் அழிக்கும்; ஒழிக்கும்.

மடியிலான் அடிக்கண்ணே உலகமும் வந்து நிற்கும்.

மடியிலானைத் தேடித் தெய்வமும் மடியில்லாது, மடியை வரிந்து கட்டிக் கொண்டு வந்து உதவமுன் நிற்கும்.

குடி என்னும் குன்றா விளக்ம் குன்றின்மேல் விளக்காக மடியிலான் ஆள்வினையால் சுடர்விடும்.

உலக இயற்கையும் உழைப்பு வல்லானின் ஆணைக்கு இணங்கும். ஆகவே தீவினைக்கு அஞ்சுக (அதி; 21)

வெருவந்த செய்யா திருக்க (57)

தெரிந்து செயலாற்றுக (47)

தெரிந்து வினையை ஆட்சி புரிக (52)

ஆளாக இருப்பார் அனைவரும் ஆளுமை வல்லாரே (62) செயல் தூயதாய் அமைக (66)

செயலில் உறுதி திகழ்க (67)

செயலாற்றும் வகையால் செயலாற்றிப் பொருள் நலம் குடி நலம் காக்க (76,103)

என ஒன்றைப் பத்து முறையால் வலியுறுத்தி வழிகாட்டிய வள்ளல் பெருந்தகை தெய்வப் புலவர் ஆவார்.

எடுத்த ஒரு செயலால் பல செயல்களை முடித்துக் கொள்க. (678)

எடுத்த செயலை அரைகுறையாக விடாது முடிக்க. (674)

செயலைச் சிறப்பாக முடிக்கச் செயல் வல்லார் துணையைத் தக்கவாறு கொள்க. (519)