உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

201

‘எனக்கு இல்லையே என் செய்வேன்' என்று எண்ணித் தீய செயல் செய்ய முயலாதே. முயன்றால், தேடியதும் தொலையும்; முன்னே சிறிதளவாக இருந்த பொருளும் சேர்ந்தே தொலையும்

(205)

அறிவில் எல்லாம் பெரிய அறிவு, தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாதிருப்பதே. ஏனெனில்; அறிவு என்பது அழிவில் இருந்து காக்கும் கருவியாகும்; தீமை செய்வார்க்கும் உட்புகுந்து அழிக்க முடியாத கோட்டையும் ஆகும். (203, 421)

மறதியால் கூடப் பிறர்க்குத் தீமை செய்தல் ஆகாது. அவ்வாறு செய்தால் அவர்க்கு நன்மையும் தனக்குக் கேடும் ஆகும் (204)

தீ எரிக்கும் இயல்பு உடையதே.

அவ் வெரிப்பும் வட நன்மையாவதும் உண்டு. சோறாக்குதல் கழிவகற்றல் தீயால் நிகழ்வன அல்லவோ! சுடச் சுடரும் பொருள்கள் உண்டு தானே?

மின் சுடுதல் மருத்துவத்தில் ஒன்றாகி விட்டதே!

சுடுதல் இல்லாமல் பல தொழில்கள் இயலாவே; சுவைகள்; பக்குவங்கள் அமையாவே!

இவற்றால் தீ செய்யும் நன்மைகள் நன்கு விளங்கும். ஆனால், தீய செயலால் தீமையை அன்றி நன்மை எவர்க்கும் இல்லையே! அதனால்,

66

"தீயவே தீய பயத்தலால் தீயவே

தீயினும் அஞ்சப் படும்'

""

என்று இருக்க வேண்டிய குறள், படியெடுத்தவர் குறையால்,

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

99

(202)

என்று அமைந்துவிட்டது என்பார் இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் (தொல்காப்பியம் -சண்முக விருத்தி),

“தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன”

என்னும் கணியன் பூங்குன்றன் மொழியும்,