உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

என்பதற்குப் பழவினை, முன் வினை, தலைவிதி என்ப வற்றொடு தொடர்பு உண்டா? உண்டெனக் கற்பிக்கலாமா?

“முதல் இழக்கும் செய்வினை”

“ஒளிமாழ்கும் செய்வினை”

“மனத்தூய்மை செய்வினை தூய்மை”

(463)

(672)

(455)

என்பவற்றில் வரும் செய்வினை செய்யும் செயல்தானே! இவற்றுக்குத் தலை ‘விதியை' விதிக்கலாமா?

சட்ட நடைமுறையை 'விதி' என்றும், அதற்கு மாறானதை 'விதி விலக்கு' என்றும், 'இனி ஒரு விதி செய்வோம்; எதையும் எந்த நாளும் காப்போம்" என்றும் கண்ட மண்ணிலே,

“வெந்ததைத் தின்று விதி வந்தால் போவது”

என்னும் தலைவிதிப் பொருளைக் கேட்டு நொந்துதானே ஆக வேண்டும்?

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

(385)

என்பது நடைமுறை அரசு (ஆட்சி) விதிகளைச் சுட்டுதலும், அவற்றை நடைப்படுத்தலும். நடைப்படுத்தாதபோது நாடு கெடும் கேடும், உலகியலில் நாளும் நாளும், நாடும் நாடும் நாமறி செய்திகள் அல்லவா!

தீய செயல், அதனைச் செய்வானுக்குக் கட்டாயம் தீமை தந்தே தீரும். அவன் நிழல், அவனை விட்டு விலகுதல் உண்டா? அது போல் அவன் செய்த தீய செயலின் பயனும் அவனைவிட்டு விலகாமல், அவனை அழித்தே தீரும்.

"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று

>>

(208)

தனக்கு நன்மை வேண்டும் என்று விரும்புபவன் எந்த பொரு தீச்செயலைச் செய்யவும் நினைத்தல் ஆகாது (209)

எந்தப் பகையைத் தேடிக் கொண்டாலும் அந்தப் பகையில் இருந்து தப்பிப் பிழைக்கலாம். ஆனால், தீவினை செய்தல் ஆகிய பகையைத் தேடிக் கொண்டால் தீமையில் இருந்து தப்பவே முடியாது (207),