உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பெரிய பெரிய விளம்பரம் செய்து கவர்ச்சி காட்டும் க்கணியம் திருவள்ளுவர் பெயரால் செய்யப்படுவது அவர் கொள்கைக்கு முற்றும் மாறானதாம்! அவர் கணித நூல் செய்தாரெனக் காட்டுவதோ, அவர் கணியம் செய்தார் என நாட்டுவதோ பொருந்தாச் செயலாம்!

'வள்ளுவம்' என்பது திருக்குறள் நெறியெனக் கற்றோர்க் கெல்லாம் முற்றத் தெளிவான செய்தியாம்! பெருவழக்கில் நிற்கும் நிலையும் பெற்றதாம். ஆகவும், 'வள்ளுவம்' என்பதைக் கணியம் (சோதிடம்) என்றாக்கிப் பரப்புதல் வள்ளுவத்திற்குப் பெருமை சேர்க்காததாம். வள்ளுவர் பெருமைக்கு இணை யில்லாமை, உலகம் தழுவிய நெறிமையே அன்றிப் பிறிது இன்றாம்! அதனைத் தமிழ் ஆய்ந்தோர் தமிழில் தோய்ந்தோர் கணியம் எனச் செய்வது, "செய்தக்க அல்ல செயக்கெடும் என்னும் அவர் வாக்குச் சான்றாகி விடுவதாம்! அரிய ஆய்வுகள், என்றும் அரிய ஆய்வுகளே! பரபரப்புத் தலைப்பு ஆய்வார்க்கு உட்கசப்பு ஆக்குவதே!

“உள்ளம் உடைமை உடைமை"

“உடையர் எனப்படுவது ஊக்கம்'

'உள்ளத் தனையது உயர்வு

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்"

“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை”

என்னும் வள்ளுவம் ஒள்ளிய தன்னம்பிக்கை நூல்!

66

ஊக்கமுடையவனுக்கு உதவ, மாறா இயற்கையும் மடிதட்டிக் கொண்டு வந்து முந்து நிற்கும்" என்பதும்,

<<

"உலகமெல்லாம் கொள்ள நினைத்தாலும் ஊக்கத்தால் முடியும்" என்பதும் அது! அத்தன்னம்பிக்கை நோக்கு, நம் நோக்கு ஆவதாக! அறியாமைச் செயல்கள் அழிந்தொழிக!