உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

211

பேயாட்டம் போடச் செய்யும் அவை, மற்றைக்கல்வி நிலையங் களை விட்டு வைக்குமா?

ஆள்வோரும் அறிவு வல்லாரும் தொண்டு நிறுவனத்தாரும் இப்போதைக் கொடுங்கையில் இருந்து இளைய தலைமுறையைக் காக்கத் தவறினால், எதிர்கால நாடு எப்படி இருக்கும்? அமைதி எங்காவது இருக்குமா? சான்றோர் நொந்தும் வெந்தும் சாவதை அல்லாமல் வாழ முடியுமா?

‘உலகச் சிறுமையைக் கண்டு எங்களால் வாழ முடியவில்லை’ என்று கணவனும் மனைவியும் கடிதமாய் எழுதிவைத்து அமெரிக்கக் கடற்கரையில் பிணமாகக் கிடந்த செய்தி உலகச் சான்றோர்க்கும் ஆள்வோர்க்கும் அறைந்த அறைகூவல் ல்லையா?

மதுவால் தேடும் பொருள் பொருளா?

குடிகளைக் கெடுத்துக் கொள்ளைக் காசு தேடக் குத்தகைக்கு விடுதலா அரசின் இறையாண்மை?

‘மதுவிலக்குத் தீவு' என இங்கிலாந்து சார்ந்ததொரு தீவை மது வணிகனுக்குப் பிறந்தும் அதன் கேட்டை உணர்ந்த மாண்பு மகன் உருவாக்கியதை உலகம் அறிந்தும் அதனை எடுத்துக் காட்டாகத் திருக்குறள் பிறந்த மண்ணாவது போற்றக்கூடாதா?

இவ்வளவு என்ன? இதற்கு மேலே எத்தனை ஆயிரம் எண்ணியிருந்தால் அந்நாளிலேயே கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தைப் படைத்திருப்பார் திருவள்ளுவர்?

சான்றோர் புகழும் புகழ்ச்சியைக் கேட்கும் இன்பமே இன்பம் என்னும் ஈன்ற தாய், சான்றோர் பழிக்கு ஆளாக்கும் மதுவினை விரும்புவானை விரும்புவளோ? (923)

‘ஈன்றாளே காண முகம் கழிக்கும் அப்பிறப்பைச் சான்றோர் காணவும் விரும்புவரோ?' (922)

C

ஈன்றாளே விரும்பாக் குடியைக் குடித்துக் குடியைக் கொடுக்கவோ இப்பிறப்புப் பிறந்தது?'

"குடித்தும் பழகியவன் குடியை விடுகின்றானா? அவள் விடுவதற்கு நினைத்தாலும் அவனை விடுகின்றதா அவன் குடிப்பழக்கம்? கொண்டது விடாக் கொடுமுதலையாக இருக்கும் கடிக்கு உள்ளத்தில் குடியிருக்க இடம் தரலாமா?"

தெளிந்து தேர்ந்து பெற்ற அறிவை அடியோடு அழிக்கும் குடி என்பதை அறிந்தும். தானே தன் அறிவைக் கொல்லும் தற்கொலையைச் செய்ய முற்படுவதா அறிவுடைமை?