உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

காரியாதன் வரும் புலவர்களுக்கெல்லாம் மதுவை வாரி வாரி வழங்குவனாம். நம் வரலாற்றுப் பெட்டகமெனத் திகழும் புறாநனூற்றில் காணும் செய்திகள் இவை.

"ஊரார் தன் குழந்தையை மெச்சிவிட்டால் தனக்குக் கள்வெறி உண்டாகன்றது" என்கிறாள் தாய்! இது பாரதியார் பாட்டு! கஞ்சாக் குடியை மறக்க எத்தனை எத்தனையோ முறை முடிவெடுத்துத் தோற்றதையும் உரைக்கிறார். (சித்தக்கடல்) அவருக்குப் பின் வந்த பாவேந்தரும் மதுமயக்கத்தில் இருந்து விட்டு விலகல் அரிதாயிறு. மதுவும் மங்கையும் இருந்தால்தான் பாடல் ஊற்றெடுக்கும். கலைகமழும் என்ற வெளிநாட்டுப் புலவர்கள் போலவே "கோப்பையிலே குடியிருப்பு” என்று கொண்ட நம்மவர்களும் இருந்தமை நாடறி செய்தி! மது வொழிப்புப் பற்றி நாடறியப் பரப்பிய நல்லதம்பியும் அதற்குத் தப்பவில்லை.

திருக்குறளுக்கு உரைகண்ட ஆய்வுசால் அறிஞர் பெரு மக்களுள் சிலரும் கள்ளும் மதுவும் கடிய உழைப்பாளர்க்கு வேண்டுவதே என்று கூறினார்; அது பொதுவறம் அன்று என்றும் புகன்றனர். மதுவை எப்படித் தடுப்பினும் தடுக்க இயலாது; கள்ள மதுவே காய்ச்சப் பெறும்; அதற்கு மதுவிலக்கை விலக்கி நாட்டுப் பொருள் நிலையைப் பெருக்குவது நலம்” என்று அரசுடையார் முடிவெடுத்தனர்.

அவ்வாறானால் களவை ஒழிக்க முடியவில்லை; கலப் படத்தைத் தடுக்க முடியவில்லை; கடத்துதலை அகற்ற முடிய வில்லை; கொலையை நீக்க முடியவில்லை; கள்ள நாணயம் அடிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றுக்கும் கட்டணம் வைத்து உரிமை வழங்கிப் பொருளைப் பெருக்கலாம் என்பதா? கொலைக் கருவி செய்தல் குண்டு வைத்தல் இவற்றுக்கும் உரிமை வழங்கி விடுவதா?

காவல்கடமை என்பது எவ்வெவ்வகைத் தீமைகளில் இருந்தும் காப்பது தானே!

அலுவலகங்களில், பொது இடங்களில் புகைத்தலைத் தடுக்கவே முடியாப் பொறுப்பற்ற அமைப்புகளையும் அரசு ஆணைகளையும் நினைத்தால் 'நகைப்பதன்றி என்ன செய்யலாம்! போதை ஊசி, போதைப் பொடி என்பன எங்கெல்லாம், எவரையெல்லாம் மீளா அடிமைக்கு ஆளாக்கி வருகின்றன! மருத்துவக்கல்லூரி வளாகத்தையே வளைத்துப்