உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. சூதொழிப்பு

"தமிழ்நாடு அறுபது காசு" அவ்வளவு மலிவாகி விட்டது தமிழ்நாடு! நூறுகாசுப் பரிசுச்சீட்டு அறுபது காசாம்!

-

தமிழ்நாடு மட்டும்தானா? நாகாலாந்து என்ன, உ.பி.என்ன, இமாசலப்பிரதேசம் (பிரதேசம் பைதிரம்) என்ன எல்லாப் பரிசுச் சீட்டுகளுக்கும் சந்தை தமிழகமே! அவ்வளவு முன்னிலை, அவற்றை அச்சிடுவது முதல்!

பரிசுச்சீட்டு பொலிவுமிக்க -கூவிக்கூவி விற்கின்ற சூதாட்டம்! சூது கருவி இருந்தால்தானா சூது! உள்ளத்திலேயே சூது உரவாவதால்தானே "சூதும் வாதும் வேதனை செய்யும்" என்னும் மொழி உண்டாயது.

பரிசச்சீட்டிலே காத்திருக்க வேண்டாமல் உடனடிப்பரிசு, விதை போட்டதும் விளைவு காணும் துடிப்பின் தூண்டல்! சுரண்டல் சீட்டு!

வயிற்றுக்கு இல்லாவிட்டாலும் வாங்கத் தவறாத பரிசுச் சீட்டு! நாட்டு வருவாய் கருதி வீட்டைக் கெடுக்கும் வினை! இளக்கமானவர்களை இழுக்கும் பரிசுத் தூண்டில்! பரிசுக்கு ஆசைப்பட்டுக் குடும்பம் குடும்பமாய்ப் பாழாகும் அவலம்! அரசே கெடுத்தால், ஆர் கெடுக்கமாட்டார்!

செம்பு பித்தளையைத் தங்கமாக்கும் ஏமாற்றில் கெட்டவர் முன்னே பலர். இப்பொழுது ஒரு பங்குக்கு இரண்டு பங்குப் பணத்தாள்; குலுக்கல் சீட்டு; தவணைக்கடை -பெருவட்டி இப்படி எத்தனை எத்தனையோ ஏமாற்று வரிகள் - ஏமாறும் ஏழை மக்கள்!

பொலிவாகப் பொருள் நிறுவனங்களின் துவக்கவிழா! சுருட்டி முடிந்ததும் எவர்க்கும் தெரியாமல் மூடுவிழா! கடையை உடைத்துப் பார்த்து, அவரவர் தலையைப் பிடித்துப் பிய்த்துக் கொள்வதும் பித்துப் பிடிப்பதும் கண்ட பயன்! பின்னே தேடுபடலம்! ஓடுபடலம்!