உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

மறைமுக நிகழ்ச்சிகளா இவை? செய்தித்தாளில் மூடுதலும் ஓடுதலும் பக்கம் பக்கமாய் வரத்தானே செய்கின்றன! அவற்றைக் கண்டேனும் விழிக்கக்கூடாதா? குறுக்கு வழியில்கோடி குவிக்க நினைக்கும் பேராசை தானே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக்கொள்ளச் செய்கின்றது.

இலக்கம் கோடி எனப் பரிசு விழத்தானே செய்கின்றது! உழைத்து அவ்வளவு தேட முடியுமா? என்பார் உளர்.

கோடி எவரோ ஒருவர் பெற, இழந்து மொட்டையானவர் எத்தனை கோடிப் பேர்கள்? ஊரையடித்து ஒருவர் வாழ வாழ்வதா வாழ்வு? போலிநம்பிக்கை, உழைப்பின் உயர்ந்த நம்பிக்கையை ஒழிக்கின்றது என்றால், அப்போலி நம்பிக்கையைப் பெருக்குவது முறைதானா? "ஊர் எரியும் வெளிச்சத்தில் முள் குத்தாமல் நடக்க முடிகிறது” என்றுசொன்னால் மூளைமாறி கூட ஒப்புவானா?

கொழுத்த செல்வர் குதிரை ஓட்டத்திலும், சீட்டாட்டத் திலும் செல்வத்தைச் சிறுபொழுது மகிழ்வுக்குச் செலவழிக் கிறார்கள் என்றால், அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலமருவானும் ஆசையால் பற்றிக் கொள்கின்றானே! தூண்டும் கவர்ச்சியைத் தூர விலக்கும் துணிவு இல்லார் விளக்கைச் சுற்றும் விட்டில் எனத் திரிவது கண்டால் அறிவர் அறவர் உள்ளம் நோகவும் வேகவும் தானே செய்யும்!

தருமன் கதை கேளாத நாடா இது? அவனினும் அறவன் தமிழ் மண்ணில் பிறந்திருந்தாலும் அவன் பெயரைச் சொல்லாமல், தருமனைத் தானே காட்டினோம்!

நளன் கதை கேளாத மண்ணா இது? தருமன் கதை கூறும் பாரதக் கிளைக் கதைதானே அது! சூதால் கெட்டழிந்தானுக்கு, உனக்கு முன்னே கெட்டழிந்தான் உண்டு என்பதைக் காட்டவதற்குக் கூறப்பட்டது தானே நளன் கதை!

நாடாண்ட வேந்தர்களும் சூதினால் கெட்டார்கள் என்ற அளவிலா நின்றது? கொண்ட மனைவியை என்ன பாடெல்லாம் படுத்த அடிப்படை ஆயிற்று. அதனால்தானே தமிழ் மறம் பாடலில், மன்னர் குடியினர் மணப்பெண் கேட்டு வருதல் இழிவினும் இழிவு என்று காட்டுவாராய்

“விற்றதார் கலைபாதி யோடு வனத்திலே அழவிட்டதார் வெஞ்சிறைப் புகவிட்டதார் துகில் உரிய விட்டு விழித்ததார்?” என்று வினாவி,