உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

215

“உற்றதாரமும் வேண்டுமென்றினி மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ?" என்று பாடினார் சிவப்பிரகாச அடிகளார்!

இதனை, நாடு பாடமாக எடுத்துக்கொண்டதா? சூதாடல் தீது என்று விட்டதா? அரசேனும் ஒழித்ததா? சூதே அரசியல் ஆகிவிட்ட பின் அரசா சூதை ஒழிக்கும்?

சங்கப் புலவருள் ஒருவராய தாமப்பல் கண்ணனார், வட்டு என்னும் சூதாட்டம் ஆடியபோது, சூதிலும் அவர் சூழ்ச்சி யாட்டம் ஆட, அதனைக் கையும் களவுமாய்க் கண்ட சோழன் மைந்தன் வட்டுக் காயையே புலவன் முகத்தில் அறைந்து விட்ட செய்தி புறநானூற்றில் உண்டு! புலவன் சிறு செயல் அது, எனின் இளையன் கெட அவன்தானே வழிகாட்டி! எதிர்கால வேந்தனைப் பாழாக்கிய கயமைக்கு இடமானவன் தாமப் பல்லான் அன்னான்தானே!

66

"ஆள்வோன் எனினும் அலுவலன் எனினும் குடிமக்கள் எனினும் குற்றச் செயல் புரிதல் குற்றமே; அதிகாரம் கருதியோ குடிப்பிறப்புக் கருதியோ குற்றத்தைக் குணமாக்கிவிட முடியாது" என்பது வள்ளுவரின் தேர்ந்து தெளிந்த முடிவு. ஆகலின் விலக்கி ஒழிக்க வேண்டிய பன்மணம் (பலவுறவு), மதுக்குடி, என்ப வற்றோடு கவறாடல் (சூதாடல்) என்பதையும் சேர்த்தார். செல்வத்தை இழந்தொழிய வேண்டுவார் செய்வன இம்மூன்றும் என்று உறுதிப்படுத்தி,

"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு” என்றார்.

(920)

தன்வெற்றி கருதியே ஆடுவதும் வட்டமாய் இருந்து ஆடுவதும் வட்டுக்காய் போன்றவற்றை உருட்டி ஆடுவதும் ஆகிய நோக்கிலே அதனைச் சூழ்து (சூது) என்றனர். அச்சூதின் கொடுமை இழிமை ஆகியவற்றை,

“ஒன்றெய்தி நூறு இழக்கும் சூது" என்றார். ஒன்று எய்துவது சூதாடி என்பதொரு பெயர். நூறு இழப்பது குடிப்பிறப்பு, கல்வி, செல்வம், மானம் இன்ன பல அவருக்கு நன்றெய்தி வாழும் வாழ்வே இல்லை என்றார்.

சூதால் கெட்டொழியும் கேடு, அறத்தொடு கூடாக்கேடு ஆதலால் ஈன்றாளும்கூட அவனைப் பிறனைப்போல் நோக்குவாள்.