உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

219

நினைக்க இனிக்கும் அமுது உண்டா? தேன் உண்டா? பருகு நீர் உண்டா? பழக்கூட்டு உண்டா? ஏன்? கவலைமாற்ற முடியவில்லை! தொடர் தொடர் துயர்; முடியவில்லை!

தொலைக்க

"புண்பட்ட மனத்தைப் புகையைவிட்டு ஆற்றுவேன்" எனப் புகைக்கின்றனரே, புகைக்கின்றனரே!

புகைக்குடி, பீடி ஆனால் என்ன, வெண் சுருட்டு, கருஞ்சருட்டு, மயக்கு இலை (கஞ்சா) மயக்கு பொடி ஆனால் என்ன நினைத்து மகிழ வாய்ப்பு 'உண்டா? கண்டு மகிழ வகையுண்டா?

இனிய நீரும், இளநீரும், இலாமிச்சை நீரும், நுங்கு நீரும், ஆவின் பாலும், பழச்சாறும் இருந்தாலும் இவையெல்லாம் மனக்கவலை மாற்ற மாட்டா என எத்தனை எத்தனை மது வகைகள்-புதுவகைகள்-குடித்துக் கவலைத் தீர்வு இதுவே என்று வீழ்ந்து கிடக்கின்றனரே! இவர்கள் இவற்றை நினைத்த அளவில் மனமகிழ்வு கொள்கின்றனரா?

முன்னை மயக்கினும் வளர்மயக்கு மேல மயக்கு - பெரு மயக்கு – என வளர்த்து வளர்த்துத் தானே முற்றாகவே மயக்கம் தெளியாமல் ஒழிகின்றனர்! இவற்றை முன்னே கண்டிருக் கிறோமே 'நோக்கில்' (22)!

முன்னே பார்த்த நோக்கை ஏன் மீண்டும் நோக்க வேண்டும்? கூறியது கூறல் தேவையில்லையே எனின் வள்ளுவரின் தெள்ளிய உத்தியை நோக்கச் சிறப்பை விளக்கவே மீண்டும் கூறப்பட்டதாம்!

-

வள்ளுவர் உள்ளம் எவ்வளவு ஆழமானது! எவ்வளவு கூர்ப்பானது! எவ்வளவு வரம்பு கோலும் வாழ்வினது! இதோ பல சொல்ல வாய்த்தும் ஒன்றைச் சொல்வோம்:

“உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு’

என்பது குறள். புணர்ச்சி மகிழ்தல் முதற் குறள்.

(1281)

மதுவைப் பழிக்கிறாரா? காமத்தைப் பழிக்கிறாரா? பழிக்க வேண்டிய மதுவை நன்றாகப் பழிக்கிறார்! பாராட்ட வேண்டிய காமத்திற்கும் நன்னெறி காட்டுகிறார். கள்ளிற்கு - மயக்கம் மதுவகைகளுக்கு நினைத்த அளவில் மகிழ்வூட்டும் தன்மை

-