உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

சில சொற்களுக்குக் காலப் போக்கில் உயர்வும் தாழ்வும் ஏற்பட்டு விடுதல் உண்டு. அவ்வகையில் காமம் என்பது உயர்வு நிலையில் இருந்து சரிந்துவிட்ட சொல்லாயிற்று.

'இன்பம்' - எல்லா உயிர்க்கும் பொதுவானது!

'காமம்' - மாந்தர்க்கே உரிய சிறப்பியல்பு!

காமம் என்னும் சொல்லின் பொருள் தாழ்ந்த காலத்தில் காமத்துப் பால் இன்பத்துப் பால் ஆயிற்று.

"அறம்பொருள் இன்பம்" (8)

"இருபதிற் றைந்தின்பம்" (20)

"இன்பம் பொருள் அறம்” (33)

"இன்பத் திறம் இருபத் தைந்து" (37)

"இன்பு சிறந்தநெய்” (47)

"இன்பின் திறனறிந்தேம்" (50)

எனத் திருவள்ளுவ மாலையில் இன்பப் பால் குறிப்புகள் ஆறு உண்டு. "காமத்தின் பக்கம்” (27)

"காமத் திறம்மூன்று' எனக் காமமும் உண்டு.

திருக்குறள் மூன்றாம் பாலில் 'இன்பம்' எனவரும் குறள் இரண்டே இரண்டு. அவ்விரண்டு இடங்களிலும் காமம் என்னும் சொல்லும் உண்டு ஆனால் காமம் என்பது தனித்து வரும் இடங்கள் (38)

ஏன்? மாந்தர்க்குரிய தனிப் பெருமைக்குரியது காமம்!

இன்பமோ எல்லா உயிர்க்கும் உரிய பொதுத் தன்மையது! அம்மட்டோ?

மாம்பழம் இனிக்கும்!

உப்பும் சுவைக்கும்!

புளிக்கூட்டு சொட்டிச் சுவைக்கச் செய்கின்றதே!

காட்சி இன்பம், கேள்வி, இன்பம், நாவின்பம், மணவின்பம் தொடுதல் இன்பம் எனக் கொள்கிறோமே? இந்த ஐந்தும் இன்பம் என்றால் இவற்றுக்கு மேற்பட்ட மனவின்பமும் நினைக்கவே உண்டாகும் இன்பமும் - ஒன்று உண்டே!

-