உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

-

221

மதுவொழிப்பு என்பதற்கு நேரிய கூரிய சீரிய ஒரே ஒரு வழியுண்டு. அது குடும்பம் குடிமைகளின் மேற்கொள்ளும் பெருநலப் பற்றுமை!

இன்னும் ஓர் இனிய செய்தி:

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்”

(785)

என நட்புக்கே கரையிட்டுக் காத்த காவலர் திருவள்ளுவர். அவர் அகவாழ்வாம் குடும்ப வாழ்வுக்கும் காவற்கடன் கற்பிக்கும் கனிவுடைய ஆசானாய் வழிவழி நாட்டு நலமும், வீட்டு நலமும், கூட்டு நலமும் ஒருங்கே காக்கும் காவல் தெய்வமாய், 'உன் இன்பம் என்ன இன்பம்?' நினைந்து நினைந்து இன்புறுகிறாயா? கண்டு கண்டு களிக்கிறாயா? நினைந்து மகிழ்வதே நேயம் பெருக்கும்! கண்டு மகிழ்வதே கவின் செய்யும்! காதல் உறவு உடைய மாந்தரீர், கிழவன் சொல்லைக் கேட்டு நடக்கப் பாருங்கள்! கேட்டில் இருந்து விலகி வாழுங்கள்! இதனை விரிப்பின் விரியும்! ஆனால் புரியவே புரியும், புரிந்து எண்ணு வார்க்கு வள்ளுவரின் மூன்றாம் பால் நோக்கு தேன் போலும் சொல்லில் மருந்து செறிந்த இளகியம் (லேகியம்) போன்ற நோக்கு!