உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. இருவரும் ஒருவர்

நீரோடும் ஓட்டத்தில் மிதவை ஓடும்; புனல் செல்லும் செலவுக்குத் தகப் புல் சாயும். ஆனால், மீன் ஒட்டம் மாறானது, நீரோட்டத்தை எதிர்த்துச் செல்வது மீனோட்டம்.

அவ்வோட்டம் அமைந்த அறிஞர்களும் அறிவர்களும் கால டங்களை வென்ற பார்வையர்; கால இடம் கடந்த சாவா வாழ்வினர்; அவ்வகையில் எவர்க்கும் பின்னடையாப் பேரறிவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவர்க்கு முன்னவரும் இலக்கணத் தோன்றலு மாகிய தொல்காப்பியனார் வாழ்வியல் இலக்கணமும் வகுத்துக் கூறியவர் அவர் காலத்தில் அவர்கண்ட நடைமுறை வாழ்வைத் தாம் கண்டவாறு கூறினார். திருவள்ளுவர் நோக்கு கண்டதைக் கண்டவாறு கூறுதல் அன்று. தக்கது எதுவோ அதனை ஏற்றுக் கூறுதலும், வாழ்வியல் கேடு எதுவோ அதனை விலக்கிக் கூறுதலும் கடனெனக் கொண்டார். அறிவர் கடன் அஃதேயாம்.

மனையற வாழ்வில் 'பிரிதல்' என்பது நடைமுறைச் செய்தி

அப்பிரிதலில் ‘பரத்தையிற் பிரிவு' என ஒன்றனைத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.(1133) ஏனெனில் அது நடைமுறை வாழ்வில் அவரால் காணப்பட்டது. ஆனால், அறிவரும் அறவரும் ஆகிய திருவள்ளுவர் அப்பிரிவின் பெயரைத் தானும் சொன்னார் அல்லர்! அம்மட்டோ? பரத்தை என்பதைப் பெண்பாலுக்கு ஆக்காமல் ‘பரத்தன்' என ஆண்பாலுக்கு ஆக்கிக் காட்டினார் (1311) அவன் கட்டற்றுச் சென்றமையால் தானே அவள் அந்நிலைக்கு ஆளானாள் என்னும் மெய்ம்மம் காட்டுவது அது!

பரத்தையை அன்றிக் ‘காமக் கிழத்தி' மனைவி ஒப்பாக இருத்தலையும், மனைவி அவளை ‘எங்கை' (என் தங்கை) என்பதையும் (1097, 1093) தொல்காப்பியர் குறிப்பார்.

திருவள்ளுவரோ 'ஒருமை மகளை'யே காண்பார். நடைமுறை வாழ்வாக எது இருக்க வேண்டுமோ அந் நன்னெறியைச் சுட்டும் வகையாலேயே ஆடவர் உலகம் உணர்ந்து திருந்துவதற்காகப் பொதுவகை சிறப்பு வகை என அருவகையால் அறங் கூறினார்.