உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

223

பொதுவறமாக அவர் கூறியது, “மகளிர்க்குக் கற்பு என்னும் உளத் திண்மை இருப்பது போல, ஆடவர்க்கும் நிறை என்னும் உள நிலைப்பாடு இருக்கவேண்டும் என்பது"

‘கற்பு' என்பதும் 'நிறை' என்பதும் ஒரு பொருள் தருவனவே. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உறுதிப்பாட்டில் கிளர்ந்த சொற்களே அவை.

கல்போலும் உறுதித் தன்மை கற்பு; கல்லாவது மலை; நிலையில் மாறாது அடங்கிய தோற்றத்திற்கு எடுத்துக் காட்டாவது அது. 'குன்றன்னார்', 'குன்றேறி நின்றார்' என்பனவெல்லாம் பாற் பொதுமைக்குரியனவே (29, 14, 898)

நிறை என்பது 'நிறையுடைமை' என்று சொல்லப்படும் பெருமையது. துலாக் கோல் எனப்படும். நடுவுநிலைச் செம்மைச் சான்று அது. நிலை நிறுத்தம் உடையது அது. நிலை என்பது உறுதிப்பாட்டில் அசையாமல் நிற்பது! தூணும் நிலையும் போல்வது. இவற்றால் வள்ளுவர் நோக்கு கற்பும், நிறையும் இருபாற் பொதுவாதல் வெளிப்படும்.

'நிறைகாக்கும் காப்பு', நிறையுடையேன் (57, 1254) என நிறை பெண்மைக்கும், 'நிறை நெஞ்சம் இல்லவர்' என நிறை ஆண்மைக்கும் (917) ஆகியமை காண்க.

மேலும், “எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்" (910) என நிறையின் விளக்கத்தையும் தெளிவிப்பார் திருவள்ளுவர்.

சிறப்பு வகையால், ஆடவர்க்குத் திருவள்ளுவர் கூறுவது,.

66

‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு'

என்பது (974) குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்னும் மணிவிளக்க மாலையின் நடுவே நிற்கும் பெருமையில் நான்காம் குறள் இது.

"ஒருப்பட்ட உள்ளம் அமைந்த பெண்மையைப் போல் ஓர் ஆடவன் நடப்பானேயானால், அவளைப்போல் அவனுக்கும் பெருமை உண்டு” என அவளையே அவன் எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒழுகுமாறு வழிகாட்டுகிறார் வள்ளுவர்.

எங்கேயோ இருக்கும் ஒருவரை எடுத்துக்காட்டு ஆக்காமல், அங்கேயே அவனோடேயே இருக்கும் எடுத்துக்காட்டைக் காட்டுவது மாறான மனநிலைக்குத் தக்க வழியாம்.