உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பெண்மைக்கு அப் பெருமை இருத்தலை அவள் பக்குவமாக நடந்து பக்குவப்படுத்த வல்லாள் என்னும் இயற்கைத் தேர்ச்சியாலே இவ்வாறு கூறினாராம்.

அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சும் தன்மை, நாணத்தக்கதற்கு நாணும் தன்மையொடு இயற்கையாய் அமைந்த நாணம், தெளிந்து தேர்ந்து கொண்டதை விடாத கடைப்பிடியாம் 'மடம்' என்னும் தன்மை ஆகியவை அவளுக்கு இருத்தலால், அத்தன்மைகள் அவன் கொண்டொழுகத் தக்க குணங்களாகி அவனைப் பெருமைப்படுத்தும்.

அன்றியும், ஒரு பெண் ஐம்புல நுகர்வும் ஒருங்கே கொண்டு கொடுக்கும் பேறு உடையள் ஆகலின், அவள் கொண்டானைத் தன் வழியில் நிறுத்திக் காக்க வல்லவளாம்.

அவளின் வயப்படுத்திக் காக்கும் இயல்பைப் “பசையினள்” என்னும் அருமைச் சொல்லால் சுட்டுவார் திருவள்ளுவர் (1098)

பசை ஒட்டுவது போல ஒட்டிக் கொள்ளும் பான்மையள்; நோக்கு ஒக்கும் நோக்கினள் (1100) நினைப்பன எல்லாம் அவனாகவே நினைப்பவள் (1102) நெருங்கும் தோறும் உயிரை ஊட்டி வளர்க்கும் உயர் அமுதாய் அமைந்தவள் (1106) புதிய புதிய இன்பந் தந்து வியப்புறச் செய்பவள் (1110) தங்கள் ஊடாகக் காற்றும் கூடப்புகுதல் ஆகாது என நெருங்கியவள் (1108) கண்ணின் கருமணியாம் பாவையாகத் திகழ்பவள் (1123) தன் நெஞ்சிலே தன் தலைவனை அமரச் செய்யும் தண்ணியள் (1128) அவன், உடலா, உயிரா? இருவரும் உடலுயிர் ஆகிய பிறப்பர் (1123) ஒரு பக்கச் சுமை ஆகாமல் இருபக்கச் சமன் சுமையாய் அமைந்த காவடி போல, இருவரும் குடும்பச் சுமை சுமக்கும் ஒப்பாளர் (1196). அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒப்பாகி, ஒத்த எடுத்துக் காட்டாகி வாழும் வாழ்வே, நிலத்தில் விதை விதைத்து மழை பெய்யாதா என வானத்தை நோக்கிய அளவில் மழை பொழிந்தால் அவ்வுழவன் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்வுச் சுரப்பானவர். (1192). வையகத்தில் வாழ்வாங்கு வாழும் தெய்வ வாழ்வர் (50).

ஆதலால், அவள் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள? என்று பாராட்டத் கிதழ்கிறாள்! அவளைப் போலவே அவனும் புகழத் திகழ்கிறான்.

அவன் பிறன்மனை நோக்காத பேராண்மைப் பெருமை யனாகத் திகழ்வதால் ஊடலுக்கு, உள்ள குறை காணாமல்