உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

தூள்! தூள்!” என்று தட்டிக் கொடுத்து வழிகாட்டும் பார்வை!"

வள்ளுவர் சொல்லுகிறார்.

"பொறியின்மை யார்க்கும் பழியன்(று) அறிவறிந்(து) ஆள்வினை இன்மை பழி”

"உறுப்புக்குறை ஒரு பழியாகாது; அதனை வெற்றி கொள்ளும் வழி வகைகளை அறிந்து, தளர்விலா முயற்சி கொண்டு வெற்றி பெறாதிருத்தலே பழி எனத் தெளி வாக்குகிறார்.

வாழ்வியல் வழியது திருக்குறள் என்பதற்கு இக்குறள் சிறந்த சான்றேயன்றோ.