உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் நோக்கு

'அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு”

235

என்பது அது (1110).

இன்பத்துப்பால்,

புணர்ச்சி மகிழ்தல்

நிறைவில்

இவ்வறிவியல் இலக்கணத்தை இயம்பிய வள்ளுவர் நோக்கு

என்ன?

"பாலின்பம் துய்க்கும் நீங்கள், அறிவின்பம் காணுங்கள்; அறிதோ றறியாமை காணும் இன்பத்தை நாளும் பொழுதும் அடையப்பாருங்கள். இப்பாலின்பம் உங்கள் கூட்டின்பம்; உங்கள் வீட்டின்பம்! ஆனால், உலகின்பம் அறிதோற்றிமை காணும் இன்பம்! அவ்வின்பம் பெற - பெருகத்தக்க தூண்டலாக இதனைக் கொள்ளுங்கள்!

அறிவில் கடையாம் மரம் செடி கொடிப்பிறப்பு நீங்கள் இல்லை! அவையும் தம் இனம் பெருக்கம்.

அறிவில் சிறிது வளம் பெற்ற புழு பூச்சி எறும்பு கறையான் பிறப்பு நீங்கள் இல்லை. அவையும் தம் இனம் பெருக்கும்.

அறிவின் வளம் வளர்ந்த பறவை விலங்குப் பிறப்பும் நீங்கள் இல்லை. அவையும் தம் இனம் பெருக்கும்.

இனம் பெருக்கவே அவையெல்லாம் எண்ணி, இன்பம் துய்ப்பனவும் அல்ல! அந்த மன அறிவு அவற்றுக்கு இல்லை.

தாம் பெறும் இன்ப இயற்கைத் தூண்டலால் நிகழ்வன அவை!

ஆனால், மாந்தப் பிறப்புடைய நீங்கள்

-

மன உணர்வு வளர்ந்த நிங்கள் அறிதோறறியாமை காணும் நீங்கள் இன்பத்தில் மட்டும் அறிதோறறியாமை கண்டு அமையாதீர்!

அறத்தில் காணுங்கள்! பொருளில் காணுங்கள்!

மெய்யுணர்வு இன்பத்தில் காணுங்கள்!

சேவைச் செம்மையில், தொண்டின் துலக்கத்தில் காணுங்கள்! புதுப்புனைவில், பயன்படைப்பில் நலத்துறையில், கலைச் செழுமையில் காணுங்கள்!

நீங்கள் இவற்றில் எல்லாம் அறிதோ றறியாமை காணும் அறிவரானால், உங்கள் வழியாகத் தோன்றும் தோன்றல்கள்