உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

நியூட்டன் "அறிதோறும் அறியாமை" என்னும் அறிவியல் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்த ஏந்தல் தாமே!

திருவள்ளுவர், இன்பத் துய்ப்பாளியைப் பார்க்கிறார். “உன் பாட்டன் படைத்த இலக்கண இன்பம் அறிவாயா? அறிந்து நட' என்கிறார்.

என்ன?

'கொஞ்சம்' என்னும் வழக்குச் சொல்லின் வரலாறு

கொஞ்சுவதற்கு எடுத்துக் கொள்ளும் சின்னஞ்சி று நேரமே 'கொஞ்சம்' என்பதை உணர்ந்தார், அதற்கு நெடுநேரம் செலவிட மாட்டாரே!

குறிஞ்சி என்பது கூடியிருத்தல்.

முல்லை என்பது எதிர்பார்த்து இருத்தல்.

மருதம் என்பது ஊடி இருத்தல்.

நெய்தல் என்பது உருகி இருத்தல்.

பாலை என்பது பிரிந்து இருத்தல்

இவ்வைந்துள் கூடியிருத்தல் என்பது ஒரு பகுதி தானே! அக்கூடியிருத்தலும், குளிர்கால நள்ளிரவு தானே!

நலவாழ்வும் நல்வாழ்வும் கருதிய நெறிமுறை இன்ப மல்லவா இது. இத்தகைய இன்பத் துய்ப்புத்தானே பசித்துக் கிடந்தான் உண்டி நலம் போலவும், தவித்துக் கிடந்தான் பருகு நலம் போலவும் குடும்ப நலம் சேர்க்கும். அந்நிலையில் தானே, புதுப்புது இன்பங்களை, உயிர்தளிர்க்கச் செய்யும் இன்பங்களை அடைய முடியும்.

ஒருவர் இன்பமா? ஈருயிர் இணையும் இன்பம்! ஓருயிராகி, ஓருயிர் படைக்கும் இன்பம்! முன்னினும் முன்னினும் காணா முடிவிலா ன்பம்! அறிதோறும் அறியாமை காணும் ஆய்வாளி - அறிவியலாளி - கண்டு பிடிப்பாளி - படைப்பாளி

ன்பம்!

இருவரும் ஒன்றாகிக் கண்ட இன்பத்தின் முன் வாய்ச் சொற்களால் என்ன பயன்? என, அவள் உள்ளத்து உணர் வளவில் அமைகின்றாள். அவன் சொல்லிக் காட்டுகின்றான்: