உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

233

ல்லை! தன்

தானே! அறிவுக்கு அளவு உண்டா? இல்லை அறியாமையைப் பறைசாற்றத் தானே அறிவே வாய்த்தது!

புத்தரிடம் அவர் மாணவர் ஒருவர் "நீங்கள் முழுதுணர் மூதறிவர்” என்றார்!

"எனக்கு முன்னே இருந்த புத்தர்களை அறிவாயா!

எனக்குப் பின்னே வரும் புத்தர்களை அறிவாயா?

என்னையாவது முழுமையாக அறிவாயா?

அப்படி இல்லாமல் இருந்தும் எப்படிப் பெருமிதப் பேச்சுப் பேசுகிறாய்?"

என்று வினாவினார். பின்னர்க் கையை மூடிக் கொண்டு “இக்கையினுள் என்ன இருக்கிறது என்பது தெரியுமா?" என்றார். 'தெரியாது' என்றான்.

"இதோ பார்! ஓர் இலை! இந்த மரத்தின் இலை! டஇதில், எத்தனை இலைகள்! இப்படி எத்தனை மரங்கள் உலகில்! யான் பெற்ற அறிவு இந்த ஓர் இலையளவு அறிவுதான்! பெறவேண்டியது உலக மரங்களின் இலையளவு!” என்றார். அவர் கண்ட அறிவு, அறிதோறும் அறியாமை அறிந்த அறிவு!

“கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலக அளவு” என்ற ஒளவையாரும், அறிதோறும் அறியாமை கண்ட அறிவர் தாமே!

66

'என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்" என்ற

திருமூலர் இவ்வழியர் தாமே!

என்ற

சாக்ரடீசர்

"எனக்கு ஒன்றே ஒன்று தெரியும்; அந்த ஒன்றும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான்” இந்நெறியர் தாமே!

மூவாயிரம் நாள்களுக்கு மேல் இந்திய விடுதலைக்காகச் சிறை வாழ்வு கொண்ட சவகர்லால் நேரு, ஆங்குப் பல்லாயிரம் நூல்களைக் கற்று அதன் பின், “நான் எவ்வளவு அறியாதவன் என்பதை இந்நூல்களைக் கற்ற பின்னரே அறிந்து கொண்டேன்" என்றது வழிவழிச் சான்று தானே!

66

,

'உங்கள் கண்டுபிடிப்பு எவ்வளவு அரியது; பெரியது" என்று பாராட்டியவர்க்கு, கடலுள் ஆழத்துள் கிடக்கும் முத்துகள் எத்தனை எத்தனையோ! யானோ கடற்கரையில் கிடக்கும் சங்கு, சிப்பி போன்ற ஒன்றிரண்டை எடுத்துள்ளேன் என்ற ஐசக்கு