உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

239

தலைவியின் தோழியருள் உசாத்துணையும் உண்டு. அசாத்துணையும் உண்டு. தலைவியின் தாய், நற்றாய்; பெற்ற தாய்; ஈன்றாள். அவளைக் கண்டித்தும் காத்தும் வளர்த்தவள் செவிலித்தாய்.

தலைவன் தோழன், வெறுந்தோழன் அல்லன். 'இடிக்கும் கேளிர்' அவன். தலைவனிடம் கனிவும் கொள்வான்; கண்டிப்பும் கொள்வான்.

'கண்டதும் காதல் இல்லை'; இரு பக்கக் காப்பரண் தோழன், தோழியர். காதல் அரும்புதல் முதல் மணத்தல் வரை இல்லை, மக்கட்பேற்றின் பின்னரும் தொடரும் நட்புகள் அவை. அதனால் காதல் 'அறம்' எனப்பட்டது ‘அறத்தான் வருவதே இன்பம்' என அறவோரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ‘அறத்தொடு நிலை' என இலக்கணரால் சொல்லப்பட்டது.

அங்கே உள்ளக் கலப்பை அன்றிப், பொருட்பேச்சு இல்லை. மணம், வாணிகம் ஆக்கப்படவில்லை. காதற்சிக்கல் ஏற்பட்டால் ஊர்ச்சான்றோர் உடன் ஒழுங்குபடுத்தினர்; ஊரை விட்டு ஊர் போனாலும் உறவாக அவர்களைக் கொள்ள ஊரார் இருந்தனர்.

தமிழ்க் காதலில் இருந்த உறவு முறை இது. இந்நிலை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்று வள்ளுவர் கருதினார். அதனால் “உள்ளார்ந்த காதலும், காதலைப் போற்றும் உறவும், அதனை மதிக்கும் ஊரும், அமைந்திருப்பதே வாழ்வியல் அறப்பேறு” எனத் துணிந்து வெளியிட்டார்.

இன்ப உறவாய் -ஒட்டாய்-நட்பாய் அமைந்தது இனம். அவ்வினத்தான் அமைந்ததே ஊர்; அவ்வாறமையா ஊர் ஊரன்று. அவ்வூரில் வாழ்வதும் வாழ்வன்று! "இன்னாது இன்ன இல்ஊர் வாழ்தல்”

"பிள்ளை தின்னும் முதலை வாழும் ஊர் அவ்வூர்;

“பெரும் பாம்பு திரியும் பேரூர் அவ்வூர்;”

என்று சங்க இலக்கியம் பேசுவது போன்ற ஊர் எதுவோ அது, “இனன் இல் ஊர்”, “இனம் போன்று இனமல்லார் வாழும்

ஊர்

""

அன்பிலா உடல், உடலன்று; எலும்பு தோல் போர்த்த கூடு அது. கம்பும் குச்சியும் வைக்கோலும் துணியும் போர்த்த பார்வைப் பொ(ய்)ம்மை போன்ற உயிர்ப் பொ(ய்)ம்மைகள் மலிந்த ஊரில் வாழும் போலி வாழ்வும் ஒரு வாழ்வா?