உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

வை வள்ளுவத் தலைவியர் வாக்கு.

வள்ளுவ நோக்கு என்ன?

241

ஒன்றிய உள்ளம்; ஒன்றாகிய உள்ளம்; உடனாகிய வாழ்வு; ஊரொடும் உறவாக வாழ வேண்டும் வாழ்வு; அவ்வாழ்வு பிரிந்து போவது ஏன்? புரிந்து கொண்டு போற்றாமை தானே! ஒரு துக்கச்சுமையா இல்லறம் - குடும்ப வாழ்வு? இல்லையே! இரு பக்கமும் சமமாகத் தாங்கும் 'கா' (காவடி) போன்றது அன்றோ! இருவரும் கூடிய அறவாழ்வில் இருவரும் ஒன்றாகிய இன்ப வாழ்வில், பொருளியல் மட்டும் பிரிவுற வேண்டுமா? அதிலும் ஒன்றாகும் நிலையே உயர்வாகும். அந்நிலை - குடிநலம்- இன நலம்நாட்டு நலம் - உலக நலம் காக்கும் நிலை என்று ஆழமாய்ப் பதித்த கருத்தை நாம் அறியவும் இல்லை; தெரியவுமில்லை! இதனைப் போற்றிக் கொள்ளும் வாழ்வே பொருளியல் புகழ் வாழ்வாம்.

66

“ஒருதலையான் இன்னாது காமம் காப்போல இருதலை யானும் இனிது”

என்பது தனிப்படர் மிகுதித் தமிழறம்.

(1196)