உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. உலக நல வாழ்வு

இரப்பார் இல்லாத உலகத்தை விரும்பியவர் திருவள்ளுவர். ஆனால், எம் வயிற்றுத் தீயைத் தணிக்க வாய்ப்பு இல்லையே என ஏங்கி நொந்தும் வெந்தும் திரிவாரைக்கண்டு உருகியவர் அத்தகையவர்க்கு உதவ வாய்ப்புத் தம்மிடம் இருந்தும் உதவ உள்ளம் இல்லாமல் இருப்பவரையும் கண்ணேரில் கண்டு கரைந்தவர். இந்நிலவுலகக் கேடாக இரத்தலும், இல்லை எனக் கரத்தலும் ‘(மறைத்தலும்) உள்ளனவே! இவை ஒழியாவா என ஆழமாக எண்ணி அறமுரைத்தவர்.’

தீயில் தசையும் கொழுப்பும் உருகுவது போல் நெஞ்ச வெதுப்பிலே உருகும் நேயத்தைக் காட்டியவர் அவர் (1060). ஒருவர் நேயத்தை உரைத்த அவர். உலகில் பசித்தோர் அனைவர்க்கும் நம் உள்ளத்தில் உண்டாகிய உருக்கத்தை ஒழிவு மறைவு இல்லாமல் "இரவு உள்ள உள்ளம் உருகும்" என்றார். இரந்து வருவார் எவரைக் கண்டாலும் தம் உள்ளம் உருகுவதை உரையாக்கிக் காட்டுகிறார்! வீடுதோறும் இரந்து வெற்றராய் வருவாரைக் கண்டு, வள்ளலார் உருகிப் பாடவில்லையா? அவர்க்கு முன்னோடியாக உருகி நின்றவர் வள்ளுவர். உருகுதல் நீராதல் தானே! வன்பொருள் வழிந்தோடுவது. ஆவதுதானே! வழிந்தோடும் நீர், மேல்வரும் வெப்பத்தால் என்ன ஆகின்றது! காய்ந்து ஆவியாய் விடுகின்றது அல்லவா! அதுபோல் இரப்பாரைக் கண்டு உருகிய வள்ளுவர் உள்ளம், அவர்க்கு உதவாதவர்களைக் கண்ட அளவில் (உருகிய உருக்கம்) காய்ந்து

ல்லாமல் ஒழிந்து போகின்றதாம். இதனை, இரவு உள்ள உள்ளம் உருகும்; கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும், (1069) என்கிறார் வள்ளுவர் தம் உள்ளத்தைத் தாமே ஓவியமாக்கிக் காட்டிய ஒண்குறள் வெண்பா இது.

இரத்தல், இருத்தல் ஆகாது, இரந்து வருவார் உண்டு என்றால் அவரைக் கண்டு வாய்ப்புளோர் கரத்தல் ஆகாது என்னும் இரண்டு கருத்துகளை வள்ளுவர் கொண்டமை இவ்வொரு குறளால் புலப்படும். புலப்படவே, இரவும்