உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

243

இரவச்சமும் அவர் இரண்டு அதிகாரங்களாகக் கூறிய நுட்பமும் புலப்படும்.

ஒன்றற்கு ஒன்று முரணாகிய செய்திகளை ஒருவர் ஏற்பது அறமா? என்னும் வினா எவர்க்கும் இயல்பாகத் தோன்றவே செய்யும் எளிமையாக எண்ணித் தெளிய ஒருகுறிப்பு; ஆத்தி சூடியில் ஏற்பது நிகழ்ச்சி என்றவர் ஐயம் இட்டு உண் என்றாரே! இதன் கருத்தென்ன?

இரத்தலை ஒழிக்க வேண்டும். இரத்தல் இல்லா வாழ்வை அரசு அமைத்துத்தரவேண்டும். அரசு அமைக்கத் தவறினும் தம்முயற்சியாலாவது அமைத்துக் கொள்ளுதல் மக்களாகப் பிறப்படைந்த ஒவ்வொருவர் கடமையும் ஆகும். ஆனால், அரசின் செம்மையாக நிகழ்த்தப் படுகின்றனவா! மக்கள் தம்தம் கடமைகளை எல்லாம் தவறாமல் செய்யும் உறுதி பூண்டு உழைக்கின்றனரா!

கடமைகள் எல்லாம்

இவ்விரண்டும் இல்லா நிலையில் பசியால் சாவாரை அச்சாவை ஒழிக்கும் பசிப்பிணி மருந்து தம்மிடம் இருப்பவர் தருமியாகிக் காக்கவாவது வேண்டுமே! சாவாரைச் சாவவிடாமல் உயிர்காக்கும் தெய்வத் தாய்மையராய் அவர் திகழவேண்டும் அல்லவோ என்கிறார். நேற்றுக் கொன்று சென்ற வறுமை இன்றும் வருமோ என ஏங்குவாரை எடுத்துக் காட்டும் வண்மை

உரு

ருக்கமே சாவாமல் காக்கும் சால்பே ஒன்றாக நல்லது கொல்லாமை என்னும் அருள் அறமே முரண்படுவது போல வள்ளுவரைச் சொல்ல வைத்ததாம்.

ஆனால், வள்ளுவர் உள்ளம் இன்னொரு குறளில் மேலும் பளிச்சிட்டது. இரத்தலை வெறுக்கும் வள்ளுவர் தாமே இரவலராகிப் பேசுகின்றார். கசிந்து கசிந்து கண்ணீர் ஒழுக அதனைத் துடைத்துக் கொண்டு கரைந்துபாடுகின்றார். “இரப்பன், இரப்பாரை எல்லாம்.”

ஆம்! இரப்பாரை எல்லாம் வள்ளுவர் இரந்து வேண்டு கிறார்! என்ன வேண்டுகிறார்? நீங்கள் இரப்பீர்கள் என்றால் அவர்கள் இல்லை என்பார்! அதனால் என்ன சொல்கிறீர்? "இரவன்மின் என்று" சொல்கிறேன் என்கிறார்.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று

என்பது அக்குறள்.

1067

இரவலர் இல்லா உலகை, இரந்து வருவார் இருந்தால் இல்லை என்று மறுக்காது ஈவார் உள்ள உலகை வள்ளுவர்