உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

முன்னுரை

திருக்குறள் உயிர் ஒப்புரிமை நூல்; உலக ஒப்புரிமை நூல். வள்ளுவம் கூறும் ஒப்புரிமைகள் சிலவற்றை எடுத்துக்காட்டுவது இச்சுவடி. இச்சுவடியைப் பேரன்புத் தோன்றல் படைத்துறை மேலோர் திருக்குறள் தொண்டர்-சான்றோர் பேரவைச் சால்பர், திருவள்ளுவர் தவச்சாலை (பெரம்பலூர்) நிறுவனருள் ஒருவர் ஆகிய தமிழ்த்திரு. க. பெரியசாமி அவர்கள், தம்தவத் தந்தையார் திருவடி மலர்களுக்குப் படையலாக்கி வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் பெரம்பலூர்த் திருவள்ளூவர் தவச்சாலை, நூல் வெளியீடு என்னும் புத்தாக்கப் பணியையும் தொடர வழிகாட்டுகின்றார்.

'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பது தாயுமானம்.

அன்புடன்

இரா. இளங்குமரன்