உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஒத்தது அறிதல்

"ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்" என்கிறதே வள்ளுவம்.

'ஒத்தது' என்பது எது?

செல்வர்கள் செல்வர்களைச் சேரும் செல்வ ஒப்பா?

வறியவர்கள் வறியவரை நாடும் வறுமை ஒப்பா?

இளையர்கள் இளையரையும் முதியர்கள் முதியரையும் நாடும் அகவை ஒப்பா?

ஒப்பா?

குடியர்கள் குடியரைக் குலாவும் குடிப்பு ஒப்பா?

சூதர் சூதரையும், ஆடுநர் ஆடுநரையும் தேடும் ஆடல்

அறிவர் அறிவரை அவாவும் அறிவு ஒப்பா?

கட்சிமை சாதிமை சமயமைச் சார்பு ஒப்புகளா? உள்ளப்போக்கு உணர்வுப்போக்கு ஆகிய எழுச்சி ஒப்பா? கருத்தொன்றி காட்சி ஒன்றி நிற்கும் காதல் ஒப்பா?

அன்றி நாம் தொடர்ந்து காணும் பிறப்பு ஒப்பு, சிறப்பு ஒப்பு,கல்வி ஒப்பு, கல்விப்பயன் ஒப்பு முதலிய ஒப்புகளா?

இவ்வொப்புகள் அன்றித் தோற்றத்தால் ஒக்கும் ஒப்பு ஒன்றும் உண்டே! அவரைப் போலவே உள்ளார்! அவரைப் போலவே குரல்! அவரைப் போலவே நடை! இப்படியெல்லாம் சொல்கிறோமே!

இவர் கண்ணைப்பார், காதைப்பார், மூக்கைப்பார் அவர் கண்ணை காதை மூக்கைப் போலவே உள்ளனவே என்னும் உறுப்பு ஒப்பா? இல்லை! நிற ஒப்பா? உயர கன ஒப்புகளா? இவையெல்லாம் ஒப்பு எனப்பட்டாலும் வள்ளுவம் சொல்லும் ஒப்பு இவற்றைக் கடந்த ஒன்றாக இருத்தல் பேரொப்பாம்! பேரொப்பு என்பது பெயர் ஒப்பு அன்று! பெரிய ஒப்பு என்னும் பொருளது! “பண்பு ஒப்பதாம் ஒப்பு" என்று சொல்லப்படும்.