உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்” என்னும் அரைக் குறளுக்கு உரிய விளக்கம்,

"உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு" என்னும் பண்புடைமைக் குறள் கூறும் பண்பொப்பே ஒப்பாம்.

'பண்பொத்தல் ஒப்பு' நூற்றுக்கு நூறும் ஒத்து வருமா? ஒத்து வருவார் உளரா? "தந்தையனையர் மக்கள்” “தாயைப் போல் பிள்ளை' இவற்றில் ஒவ்வாமை காண்கிறோமே! உயிர்க் காதல் என்றவர் விட்டு விலகுதல் மட்டுமா, வெட்டுக் குத்திலே இழிதல் இல்லையா?

'உயிர் நட்பு' என்பது மாறாப் பகையாய் தீராத் துயராய் ஆகிவிடுவது இல்லையா? அப்படியானால் 'முழுதுறும் ஒப்பு' எப்படிக் காண்பது? முழுதுறும் ஒப்புக் காணாமையால் பகையோ மாறா காட்ட வேண்டுமே? பிரிவோ பிளவோ கொள்ள வேண்டுமா? பழியோ இழிவோ பகர வேண்டுமா? அப்படி யானால் எவரொடு எவர்க்கு உறவு உண்டு? கூட்டு உண்டு? ணைப்பும் இசைவும் உண்டு? முற்றிலும் ஒத்துப்போகாமை என்றால் உலகில் ஒருவர்க்கு எவரொருவரும் ஒத்தவராக இருக்கமாட்டார்! இருவர் இணைவுக்கு வழியே இல்லை! வள்ளுவம் ‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்பதற்குப் பண்பு ஒப்பதாம் ஒப்பு என நாம் கொண்டாலும் பயனாவது ல்லையே!

திருவள்ளுவர் நூற்றுக்கு நூறும் பண்பு ஒப்புப் பார்த்து உறவாடுவதைக் குறித்தார் அல்லர்! நம் இயல்புக்கும் அவர் இயல்புக்கும் ஒத்தது யாது எனப்பார்! அவ்வொப்பை மட்டுமே எண்ணிப் பார்த்து அவ்வகையிலே மட்டும் உரிமை உறவு கொண்டாடு!

பார்க்கும் போதே ஒத்தது பல இருப்பினும் அவற்றைப் பார்ப்பதை விட்டுவிட்டு ஒவ்வாதவற்றை ஒன்று இரண்டு என்று எண்ணிப் புறக்கணியாதே! அப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வாதவற்றையே எண்ணினார் ஒருவரும் நெருக்கமாக இரார்.

"நெல்லுக்கு உமியுண்டு! நீருக்கு நுரையுண்டு!