உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம்

40

“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது”

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு”

இன்ன மணிக் குறள்களை மனத்தகத்துக் கொண்ட பிறவி பிற உயிர்க்குத் துன்ப ஆக்கமும் இன்ப நீக்கமும் எண்ணுமோ?

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தருள் வைக்கப் படும்.'

என்ற குறளின் ஒத்தது. பிறப்பு ஒப்புமை உணர்வில் கனிந்த 'இன்ப ஆக்க' 'துன்ப நீக்க' ஒப்பு அல்லவோ! உயிருடையதுதானே. உயிருடையதன் உணர்வை உணர்ந்து போற்ற முடியும்!

செத்தது போற்றுமா? உயிர் வாழ்வும், உயிரொடு இருந்தும் சவமாம் நிலை 'ஒத்த தறியா'க் கேட்டின் கொடைதானே!

சுவாயம்பு மநு எத்தகையராம்? இதோ மநு தர்மசாத்திரம் புகல்கின்றது.

"பொறிவாயில் ஐந்தவித்து, விஷய சுகங்களை நாடாமல் மனத்தைத் திருப்பி பரம்பொருளிடத்தே ஊன்ற நிறுத்திய சுவாயம்பு மநு" என்கின்றது. அவரிடம் தேவரிஷிகள் சென்று வணங்கி “நால்வருணத்தரும் மற்றொரும் கடைப்பிடிக்கத்தக்க அவரவர் செயல்கள் கடமைகளை எமக்கு உணர்த்துவீராக என்கின்றனர். இவை மநுதரும சாத்திர முதலிரு சூத்திரங்கள். இதற்குத் தரும் விளக்கமே மநுதரும சாத்திரம்.

பகுத்தறிவு மாமணிகளும் மனுதர்ம ஆட்சி செய்வது தானே மனுநீதி நாள்! இன்றும் நடைபெறுகின்ற காட்சி இல்லையா? மனுநீதிச் சோழன் என்றால் அவன் மனுநெறி மாறாமல் ஆட்சி புரிந்தான் என்பதால் பெற்ற பெயர் தானே!

"எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேலே மிதக்கும்" என்பார் பாவாணர்! உண்மை ஒருநாள் முகங்காட்டாமல் ஒழியுமா?

"நாலாம் வருணத்தோன் அரசானயிருக்கும் நாட்டில் வசிக்கக்கூடாது. தாழ்ந்த சாதியினருடன் மரநிழலில் கூட ஒன்றாக இருக்கக்கூடாது. 4 : 61. 4 : 69 பிராமணரை, அவரால் தொல்லையுற்ற போதும் நிந்தித்தல் கூடாது.