உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிறப்பு ஒப்பு

பிறப்பு ஒக்கும். பிறப்பு ஒப்பானதே என்றால், சிறப்பும் எத்தகையதாகும்? அதுவும், ஒப்பானதே ஆகும் என்பது வெளிப்படை.

ஒருவன் என்ன தொழில் செய்கின்றானோ, அதற்குத் தகச் சிறப்புண்டு என்னும் தொழிற் சாதிப் பகுப்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே 'வருணமும்' ஆயது!

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவோடு பஞ்சமர் என்னும் ஐந்தாம் பிரிவும் உண்டாக்கி விட்டனர்.

மாந்தர்க்கு மட்டுமா? பாகன் சொல்வழி நில்லாத யானையைச் ‘சூத்திர யானை' என்று பாகன் அடித்த அடியைக் கண்டு பாரதியார் வருந்தி எழுதினார். வருணக் கூத்து இவ்வளவு அவ்வளவா?

தமிழ் எழுத்துக்களில் இவை இவை பிராமண, சத்திரிய வைசிய, சூத்திர எழுத்துகள் என்று பாட்டியல் நூல்கள் மொழியாக்கப் பெயரால் மொழிக்கேடு புரிந்தன. சூத்திர எழுத்து 'ழ, ள' என்னும் இரண்டேயாம்!

பன்னீர் உயிரும் முன்னொற்று ஆறும் மன்னிய அந்தணர் வருணம் ஆகும்.

தநபம யர எனச் சாற்றிய ஆறும் மனமகிழ் அரசர் வருணம் ஆகும்.

லவறன என்னும் நான்கும் புள்ளியும் இவர்தரு வணிகர்க்கு எய்தும் என்ப.

ழள எனும் இரண்டும் வளமையர்க் காகும்.

இவை இலக்கண விளக்க நூற்பாக்கள், 'வளமையர்' என்று நூற்பா கூறினும் உரை ‘சூத்திர வருணம்' என்றே கூறுகின்றது. நூலியற்றியவரோ வைத்திய நாத தேசிகர்,