உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

257

வெண்பா, அகவல், கலி, வஞ்சி என்னும் பாவகைகளுக்கும் வருணம் பூசினர்.

66

“அந்தணர் சாதி ஆகிய வெள்ளை”

“காவலர் சாதி ஆகிய அகவல்” “நெடுநிலைக் கலியே வணிகர் சாதி” “எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி”

என்பவை பன்னிரு பாட்டியல்.

66

"ஆங்கிலேயர் தொடர் வண்டியை அமைத்துத் தந்ததுடன் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு எனப் பெட்டிகளுக்குப் பெயரும் சூட்டினர். இந்நாட்டினர் கண்டு பிடித்து இயக்கியிருந்தால் பிராமண சத்திரிய வைசிய சூத்திர பஞ்சம என்றே பெயர் சூட்டியிருப்பார்" என்று பாவாணர் தெள்ளிதின் எழுதினார்.

இந்நிலையில் வள்ளுவப் பார்வை எப்படியுள்ளது. "பிறப்பு ஒக்கும்; அவ்வாறே சிறப்பும் ஒக்கும்”

என்கிறது.ஏன்?

“இன்ன தொழில் செய்வது சிறப்பு என்றோ இன்ன தொழில் செய்வது இழிவு என்றோ”

வள்ளுவம் கூறியது இல்லை. எத்தொழிலும் சிறப்புக் குரியதே என்பது அதன் விரி பார்வை.

வினைத் தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை என்பவற்றில் இன்ன வினை என்னும் குறிப்பு உண்டோ?

இன்ன வினை உயர்வு. இன்ன வினை தாழ்வு என்னும் 'இரைச்சல்' உண்டோ? இல்லையே!

அம்மட்டோ?

சூத்திரத் தொழிலாக வாய்கிழியப் பேசப்பட்ட - அவர் தந்த ஊணுடை கொண்டே வாழ்ந்தும் பேசப்பட்ட உழவர் தொழிலை, “உழவே தலை" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' உழுவார் உலகத்தார்க்கு ஆணி” “இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவார்” என்பவற்றுடன்,

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை'

என்றும் பேசியது வள்ளுவம்.

""