உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

இனிப் ‘புகழ்' என்பதோர் அதிகாரம் திருக்குறளில் உண்டே! தீவினைக்கு அஞ்சுபவராய், ஒப்புரவு உணர்வு மேம்பட்டவராய் ஈகைக்கு இருப்பிடமானவராய் இருப்பவர் எவரோ, அவரை என்றும் சாவா உடம்பினராக்கி வைப்பது புகழ் என அதிகார முறையில் அறியச் செய்வது வள்ளுவர் வைப்பாகும்.

புகழை எப்படிச் சொல்கிறது குறள்?

உயிர்க்கு ஊதியம் என்கிறது!

புகழ் எப்படி வரும் என்கிறது? ஈதலால் வரும் என்கிறது!

ஈதல் என்பது என்ன? பசிக்கு வழங்கும் உணவு அளவோ ஈகை? ஏனை ஏனை உதவிகளைச் செய்வதெல்லாம் ஈகையே! குருதிக் கொடை என்ன! கண்கொடை என்ன! சிறுநீரகக் காடை என்ன! எல்லாம் ஈகையே! ஈகமே!

“நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது”

(235)

என்னும் வியன் குறள் ஈகையின் விளக்கம் கூறும் புகழ்மணிக் குறளாகும். பிறர் நலம் கருதிய வாழ்வு உயர்வாழ்வு, மேல் வாழ்வு என்பது வள்ளுவப் பிழிவு.

தொழிற் 'சிறப்பு ஒக்கும்' என்றால்,

“சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்கிறாரே திருவள்ளுவர். இது முரண் அல்லவோ!" என்று வினவத் தோன்றும்.

று

திருவள்ளுவர் இக்குறளில் தொழிலில், உயர்ந்த தொழில் தாழ்ந்த தொழில் என்று பேசவில்லை. எத்தொழில் ஆனாலும் அத்தொழிலைச் செய்யும் முறையிலேயே பெருமையும் சிறுமையும் உண்டு என்கிறார்.

திருத்தமாக தெளிவாக நிறைவாக செம்மையாக எத் தொழிலைச் செய்தாலும் அத்தொழில் சிறப்பினதே! அவ்வாறு செய்யப்படாதவை சிறப்பில்லனவே என்கிறார்.

பிறப்பொக்கும் என்ற திருவள்ளுவர்,

“உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுக்கத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு”

என்றது போல்,

(933)