உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

259

தொழிற் சிறப்பு ஒக்கும் என்ற அவர் அத்தொழிலைச் செய்யும் முறை, முறைகேடு என்பவற்றால் 'சிறப்பு ஒவ்வா' என்றார்.

"கோயிற் சிலையினைப் பூசை செய்வோர் கொண்டு விற்றல்” ஏற்ற தொழிலுக்குச் சிறப்பாகுமா?

கற்பித்தல் என்பது கண்ணளித்தல்; புண்ணைக் கண்ணாக்கல், ள்ளொளி பெருக்கல் என்பவை வள்ளுவம். மதிப்புக்குரீய அத்தொழிலைச் செய்தார், 'கண்ணைக் கெடுத்துள்ளமை’ நாடறி பொருளாக உள்ளதே! தொழில் செய் வேற்றுமை சிறுமைப்படுத்தி விட்டதன்றோ!

"ஓருயிரின் துடிப்பை மற்றோர் உயிர் தாங்கிக்கொள்ள மாட்டாமல் ஓடிப்போய்ச் செய்யும் உதவிக்குப் பெயர் மருத்துவம் என்பது உணர்வுடையோர் உரை.

ஆனால், ஒரு மருத்துவப் பல்கலைக்கழகப் பெருந்தகையும், மருத்துவப் பேராசிரியர்களும், காவலாளிகளின் வழியே, தாள் பொறுக்கும் சாக்கில், தாள் பொறுக்குவாரை வரச் செய்து குனிந்து பொறுக்கும் போதில் பிடரில் அடித்துப் போட்டுச் சிறு நீரகங்களையும், கட்பாவைகளையும பிறவற்றையும் கவர்ந்துள்ளனர். ஒருவர் இருவர் அல்லர்; முப்பதின்மர்க்கு மேற்பட்டவர், மேலை நாட்டுச் செய்தி இது.

தொழில் செய்முறை, தொழிலுக்குச் சிறப்புத் தந்ததா? அலுவலகங்கள் சிவவற்றில் கடைநிலை அலுவலராக இருப்பவருள் சிலர் எத்தகைய தலைநிலையராக உள்ளனர் என்பதையும், தலைநிலை அலுவலராக உள்ளருள் சிலர் எத்தகைய கடை நிலையராக உள்ளனர் என்பதையும் நாம் நடைமுறையில் அறிவது தானே!

‘வையகம் காப்பவ ரேனும் - சிறு

வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் பொய்யகலத் தொழில் செய்வதே - புவி போற்றிட வாழ்பவர் மேலோர்'

என்பது பாரதியார் வாக்கு!

நாம் ஆய்ந்த குறள்! 'பெருமை' அதிகாரஞ் சார்ந்தது என்று அறிந்து கொள்வதும் இப்பொருளுக்கு வலுவான சான்றாகும். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்' 505.