உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கல்வி ஒப்பு

உயிரி என்பது உயிருடையவை அனைத்துக்கும் ஆகிய பொதுப் பெயர். ஆனால் வாழும் உயிர் என்று சிறப்பித்துச் சொல்வது ஆறறிவு வாய்ந்த மாந்தரையே யாம்.

வாழும் உயிர்களுக்கெல்லாம் வெளிப்படத் தோன்றும் கண்கள் இரண்டு உள்ளமை போல, அகப்படத் தோன்ற வேண்டும் கல்விக் கண்கள் இரண்டும் உண்டு. அவை, எண்ணும் எழுத்தும் என்பன.

வாழும் உயிர்களுக் கெல்லாம் பிறப்போடு கண்கள் உண்டாயமை போல எண் எழுத்துக்களாம் கண்களையும் உண்டாக்கிக் கொள்ளுதல் கட்டாயக் கடமையாம்.

அக் கண்களை உருவாக்கிக் கொள்வதற்குத் தகவே உடலாக்கங்கள் அமைந்துள்.

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் புறப்பொறிகள் ஐந்து மட்டுமா, மனமெனும் அகப்பொறியும் ஆகிய ஆறும் மாந்தர்க்கு அமைந்துளவே! இவற்றின் புலன்களாக ஊறு சுவை ஒளி உயிர்ப்பு கேட்பு சிந்திப்பு என்னும் ஆறும் அமைந்துளவே. இப்புலன்களின் விளைவுதானே புலமை என்பது.

புலமை அமைதல் தானே புலப்பாடு!

புலன்கள் இருந்தும் புலப்படுதல் இல்லை என்றால் அது பிறவிக்கே இழிவு இல்லையா? படைப்பின் நோக்கத்தைப் பாழாக்குவது இல்லையா? ஆதலாலேயே கல்வியைக் கண்ணாகக் காட்டி, “கண்ணுடையவர் என்பவர் கற்றோர்” என்றும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றும் வள்ளுவம் பேசிற்று.

கல்வியா, கேள்வியா, அறிவுடைமையா எல்லாம் பொதுமைய. ன்னவர்க்கே கல்வி, இன்னவர்க்குக் கற்பித்தலே ஆகாது! ன்ன பாலினர்க்கே கல்வி; இன்ன பாலினர்க்குக் கற்பித்தல் ஆகாது! இன்ன அகவையர்க்கே கல்வி, இன்ன அகவைக்குமேல் கல்வி இல்லை என்னும் கல்விக்குப் புறம்பான கட்டளைகள்