உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

261

தமிழ் மண்ணில் தோன்றியது இல்லை. தமிழர் பண்பாட்டில் அமைந்தது இல்லை. மக்கட்குப் பொதுப் பொருள் கல்வி என்பதே தேர்ந்த முடிவு! கண்ணொடு ஒப்பிட்டுக் கல்வியைக் கூறிய ஒன்றே அதனை மெய்ப்பிக்கும்!

பாட்டரங்கேறிய வேந்தர்கள், ஆய்வரங்கில் பங்கேற்ற அரசர்கள், நூல்களைத் தொகுப்பித்த காவலர்கள் பலர்.

அரசரோடு பாவன்மையமைந்த அரசியாரும் பலர்.

வணிகப் புலவரென்ன, கொல்லர், கொற்றர், தச்சர், பூண்கொல்லர், குயவர் என்னப் பல்வேறு தொழில் வல்ல புலமையர் எண்ணறோர்.

மலைவாழ் எயினர் (வேடர்) புலமை நலமும், காவல் பணியர் புலமைத் திறமும் சிறந்து விளங்கினர்.

உழவர் புலவர்களாம் கிழார்கள், ஆசிரியப் பணிபுரிந்த சான்றோர்கள் அருளாளப் பெருமக்கள், மெய்ப்பொருள் வல்லார் என்பாரெல்லாம் சங்க நூற் கொடையாளராகத் திகழ்ந்துளர். தொழிற் பொதுமை போலவே, பால் பொதுமையும் அப்புலமையர் பட்டியலைப் பார்த்த அளவில் புலப்படும்.

இளம்பாலாசிரியர், பாலாசிரியர், ஆசிரியர், பேராசிரியர், கணக்காயர் என்னும் பெயரிட்ட புலவர்களை எண்ணிய அளவில் இளம் பாலர் முதல் கற்பித்தார் என்பது புலப்படுமே!

சாவுமளவும் கற்றல் கடமை என்று அவர்கள் கொண்டமை, "சாந்துணையும் கல்லாதவாறு என்?" என்று வள்ளுவம் வினாவு வதாலேயே புலப்படுமே!

66

“ஓதுவது ஒழியேல்'

"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா” “பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்”

என்னும் பன்மொழிகளும் பின் மொழிகளாகத் தொடர்ந்த மண்ணில், கல்வி நிலை இரங்கத் தக்கது ஆகியது ஏன்?

“அடுப்பை ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?" என்று பெண்மையைப் பெரும் பழிக்கு ஆளாக்கி, வழிவழிச் சிறுமையைச் செய்தது ஏன்?

கலைமகளை உருவாக்கி வழிபடச் செய்து விட்டுக் கல்விக் கண்ணில் மண்ணை மூடியது ஏன்?