உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம் 40 ஓ

தமிழரில் 90 விழுக்காட்டினர்க்கு மேற்பட்டாரும் தற் குறியராகவும் கீறலிடுபவராகவும் போயது ஏன்?

"வேதத்தைக் கேட்டால் கேட்டான் செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று சொன்னால் நாவை அறு; நினைவில் கொண்டிருந்தால் 12 விரல் சுடுகம்பியைச் செலுத்து” என்றமை போலப் பொதுக் கல்விக்கே கேடு சூழ்ந்தமை ஏன்?

கற்றவர் தந்நலமும் சூழ்ச்சியும், காவலர் என்னும் பெயரால் பொதுமைக் காவல் கடமையை மறந்து, கற்றறி சூழ்ச்சியர்க்கே காவலும் அரவணைப்பும் செய்பவராக அமைந்த ஆட்சியர் நிலையும் இத்தகைய கீழ்மைக்கு இடந்தந்தன.

தமிழுக்கு ஆக்க மிக்க பணி புரிந்த அறிவு வல்லாரும், பொதுமை நலமும் கல்விக் கட்டாயமும் கருதாராய்த்,

66

“தன்மகன் ஆசான் மகனே மன்மகன்

பொருள்நனி கொடுப்போன் வழிபடுவோனே

உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே"

என ‘இன்னவர்க்கே கற்பித்தல் வேண்டும்' என விதிவகுத்தனர். (நன்னூல் 37) இவ்வளவில் நில்லாராய்,

“களிமடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் தறுகணன் பாவி படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே” என்றும் கூறினர் (39).

"நோயுடையார்க்குத் தானே மருத்துவர் உதவி வேண்டும்; அவர்க்கு மருத்துவம் புரிதல் ஆகாது" என்பது ஒப்புரவுப் பார்வை பாராத கல்விப் பார்வை; உயர் பார்வையாகுமா?

தம் மக்களுக்குக் கல்வி அறிவினைத் தராத ஊரினை ஊராகக் கருதாமல், முட்காடாகக் கருதித் தீயிட்டுக் கொளுத்துக என்பாராய்த் "தேடு கல்வியிலாததோர் ஊரினைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்றார் பாரதியார்.

அதற்கு மேலேயும் மெய்ம்மையுணர்ந்த பாவேந்தர் ஊரைத் தீயிட்டு ஆவதென்ன? தாம் கற்றிருந்தும் வாய்ப்புகளைப்