உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

263

பெற்றிருந்தும் பிறர்க்கு அக்கல்வியைத் தராத தந்நலத்தாரை அல்லவோ தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கருதியவராய், “கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் ஆங்குண்டாம்”

என்றார்.

66

“கற்க.”

“கசடறக் கற்க.” “கற்ற பின் நிற்க.”

“கேடில் விழுச்செல்வம் கல்வி.”

66

“களரனையர் கல்லாதவர்.

66

"விலங்கனையர் கல்லாதவர்.”

“கற்றில னாயினும் கேட்க'

66

""

“எனைத்தானும் நல்லவை கேட்க” "அறிவுடையார் எல்லாம் உடையார்” “அறிவு அற்றம் காக்கும் கருவி”

என்றெல்லாம் கூறும் வள்ளுவம் பிறந்த மண்ணில், அந்நெறிகள் போற்றப்பட்டிருந்தால் “முதியோர் கல்வி” என்றும், “இரவுப் பள்ளி” என்றும், "அறிவொளி இயக்கம்" என்றும், "பள்ளி சாராக் கல்வி” என்றும் இன்ன பல திட்டங்கள் இந்நாளில் மேற்கொள்ள நேர்ந்திருக்குமா?

இறை மாட்சி எதனால் உண்டாம்?

இறை மாட்சிக்கு மூலம் எது?

என்பதைச் சுட்டிக் காட்டுபவராக, இறை மாட்சியை அடுத்தே “கல்வி”யை வைத்த வள்ளுவத்தை, இறைமாட்சியைக் கொண்டோர் எண்ணாத விளைவு இன்று வரை தொடர்தலை அறிவுடையார் இன்றேனும் எண்ணவேண்டுமே! வள்ளுவ வழி ஆட்சியை மேற்கொள்ள வேண்டுமே! பல்கலைக் கழகங்கள் வள்ளுவப் பண்ணைகளாக விளங்க வேண்டுமே! இவற்றை உருவாக்கும் ஒரு தலைவன் உருவாகும் நாளே உலகில் நான்னாளாம்! ஏனெனில் கல்வியைப் போலவே, வையகப் பொது நூல் அல்லவோ வள்ளுவம்!