உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கல்விப் ‘பயன் ஒப்பு’

கல்வி ஒப்பு முன் கண்டோம். இனிக் கல்விப் ‘பயன் ஒப்புக்

காணலாம்.

ஒரு சொல்லைத் தானும் பயன் இல்லாமல் சொல்வதைத் தாங்காதவர் திருவள்ளுவர். அதற்கெனவே பயனில சொல்லாமை என்றோர் அதிகாரம் வகுத்தவர்.

பயனிலாச் சொல்லைப் பதர்ச்சொல் என்றும் அச்சொல் சொல்பவனையும், அதனை நன்று என்றும் பாராட்டுபவனையும் பதர்கள் என்றும் கடிந்தவர் திருவள்ளுவர்.

சொல்லைச் சொல்லும்போதும் சொல்லும் வகையால் சொல்லி ஆழப்பதியச் சொல்ல வேண்டும் என்றும் அப்படிப் பதியச் சொல்லாச் சொல்லைச் சொல்வதும் சொல்லா திருப்பதும் ஒப்பதே என்பாராய்ச் ‘செலச் சொல்லல்' என ஒரு முறைக்கு மும்முறை கூறியவர் திருவள்ளுவர்.

பதர்ச்சொல் படியாமல், செலச் சொல்ல வேண்டும் என்ற செந்தாப்புலவர் தம் நூலை அச்செம்மையில் வழுவிப் படைப்பரோ? முழுமுதனை வாழ்த்தும் முதற்பாட்டை அடுத்தே கல்விப் பயனைக் காட்டி வைத்தார்.

இறைமாட்சியை அடுத்தே கல்வியை வைத்த சிறப்பை மறவாது நினைத்தல் வேண்டும். கல்லாரும் கற்றறி நூலோர்பால் கேட்டறிதல் வேண்டும் என்பதற்காகக் கேள்வியை வைத்தவர் அவர். 'எனைத்தானும் நல்லவை கேட்க' என்றவரும் அவர் அக்கல்வி, பயன் செய்யாமல் பயன்படாமல் ஒழிதல் ஆகுமா?

பருவம் கண்டு உழுது, பயிரிட்டு, காவல் புரிந்து களத்தின் பயன் கண்டு களஞ்சியத்தில் சேர்த்துக் காலமெல்லாம் பயன் பெறுதற் கல்லவோ முயல்கின்றான் உழவன்! பதரைப் பெறவோ பாடுபடுவான்! அப்படியே,

66

“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல்"

என்னும் பேதையரைப் பெருக்கவோ கற்க வேண்டும்?