உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

265

'மனம்' மன்னுதற் கருவி! அங்கே மாசு மன்னினால், வாழ்வே மாசில் மன்னும்! அங்கே மாசின்மை மன்னினால், மாசிலாமணியாய்த் திகழும்! மனம்போல் வாழ்வு என்பது அது

தானே!

இனிக் கல்வியைத்தான் எப்படிக் கற்க எத்தகையதாய்க் கற்க ஏவுகிறார் வள்ளுவர்!

“ஒரு முகப்பட்டுக் கற்க” என்கிறாரே?

பன்முகப்பட்டுச் சிதறும் கல்வி, சிந்தையில் ஊன்றும்

கல்வியாகுமா?

சிதறும் கல்வி, காலமெல்லாம் பாதுகாப்பாம் கல்வி

ஆகுமா?

அதனால்தான் எழுமையும் ஏமாப்பாம் (பின்வரும் கால மெல்லாம் பாதுகாப்பாம்) கல்வியாக ஒருமுகக் கல்வி விளங்கும் என்றார்.

கல்வியில் மாசு இருத்தல் ஆகாது; இருந்தால் கற்றவரிடம் மாசு இல்லாமல் ஒழியாதே! அவர் வாழ்வு மாசின் உறையுளாகத் தானே இருக்கும்?

இவற்றை எண்ணியே, 'கற்க' என்றவர் 'கசடறக் கற்க’ என்றும், நிற்க அதற்குத் தக என்றும் கூறினார். முன்னை இருந்த கசடும் அறக் கற்கும் கல்வி, பின்னவரும் கசடும் வாரா திருக்கக் கற்கம் கல்வி, கசடறக் கற்கும் கல்வியாம்!

கால்வைக்கும்போதே கசடு, கற்கும்போதும், கசடு பட்டம் பெறும்போதும் கசடு, பணியில் புகும்போதும் கசடு, பணியுயர் விலும் கசடு எனக் கசடுகளின் கிடங்காக இருப்பார் கல்வி, கல்வி ஆகுமா?

“கற்றதனால் ஆய பயன் என் கொல்?”

என்று வினாவுகிறாரே திருவள்ளுவர்!

கற்ற தன் பயன் இதுதானா?

தூய அறிவன் வழியில் ஒழுகத்தானே கற்றனர்! கற்றவர் அறிவன் வழியைப் பற்றிக் கொண்டனரா? பற்றிக் கொள்ளாதவர் கற்றவர் ஆவரா?

அறிவறிந்த மக்கட்பேறு, பழிபிறங்காப் பேறாகவும் இருத்தல் அல்லவோ இலங்கறிவின் பயன்? விளங்கறிவு, இலங்கறிவு,