உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

வாலறிவு என்பனவெல்லாம் மக்கட் பேற்றின் மாண்பு அல்லவோ! கற்றும் அவற்றை அடையார் ஏட்டுக்கல்வி, கேட்டுக் கல்வியே அன்றித் தேட்டுக் கல்வி ஆகாதே! அக்கல்வி கற்பித்தலும், அடைதலும், அதனால் வாழ்தலும் ஏமாற்றும், வஞ்சமும் ஆதலன்றிக் கல்விச்சீர் ஆகாதே!

வாணிகம் செய்வார் கோல் 'சீரை' எனப்படும்!

மன்னவர் கோல் 'செங்கோல்' எனப்படும்!

உழவர் கோல் 'உயர்கோல்' எனப்படும்!

கற்பிப்பார் கோலும் கற்பார் கோலும்

வஞ்ச ஏமாற்றுக் கோல்களாயின் அவர்

வஞ்சரும் நஞ்சரும் ஆவரன்றிக் கற்போரும் கற்பிப்போரும் ஆகாரே! அவர்க்கு உறைவாம் கல்வி நிலையங்களும் கசடர் நிலையங்களேயன்றிக் கற்றோர் நிலையங்கள் ஆகாவே!

-

ஏய்த்துப் பிழைக்கவும் எத்திப் பிழைக்கவும் பயிற்சி பெறுதற்கோ கல்வி நிலையங்களில் கால் வைத்தல் வேண்டும்? 'கற்றவர் இவர்' 'கல்லாதவர் இவர்’

என்பது சொல்லால் வேறுபடத் தெரியவில்லை; செயலால் வேறுபடத் தெரியவில்லை; பண்பாட்டு ஒழுக்கத்தால் வேறுபடத் தோன்றவில்லை என்றால் கல்லார்க்கும் - கற்றார்க்கும் உள்ள வேற்றுமைதான் என்ன?

காலக் கழிவும், பொருட் கழிவும் ஆனதன்றிக் கண்ட பயனும், கொண்ட பயனும்தான் என்ன? செல்வம் பெற்றும், பிறர் நலம் நாடி அதனைப் பயன்படுத்தார் பூரியர் என்றும், பெற்றதனக்கும் நலமாக்கப் பேதைத் தன்மையர் என்றும் பழிக்கும் திருவள்ளுவர்.

கேடில் விழுச்செல்வம் கல்வியைப் பெற்றும் கேடராகவும் கேட்டுக்குத் துணை செல்பவராகவும் இருப்பாரை ஏற்பரோ?

தாம் பெற்ற கல்வியால் உலகமும் இன்புற வேண்டும் என்று கருதுதலும் கடமை புரிதலுமே கல்விப் பயன் என்னும் திருவள்ளுவர் அக்கல்வியால் துன்பும் - துடிப்பும் துயரும் செய்வாரைக் கற்றவர் பட்டியலில் வைப்பரோ?

எந்நாடும் எம்நாடே! எவ்வூரும் எம்ஊரே என்பதன் வழிப்பட்ட உலக ஒருமை உயிர் ஒருமை பேண வேண்டிய