உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

271

தேர்ந்த அறிவர், பற்றற்றோர், விருந்தினர், சுற்றத்தார் என்பாரையும் தன்னையும் காத்துக் கொள்ளல் வேண்டும் என்கிறார். இவற்றைப் போற்றினால் எவரே பசித்துக் கிடப்பார்; இரந்து திரிவார்?

இனி உழு தொழிலில் ஈடுபட்டாரும் அவர்க்கு உதவியாம் கைத்தொழில்களில் ஈடுபட்டாரும் இரந்து வேண்டித் திரிவார் அல்லர்! அவர்கள் தம்மை நாடி வந்தார்க்கு ஈயும் வண்மையர்! ஆம்!

“இரவார் இரப்பார்க்கொன்றீவர், கரவாது கைசெய்தூண் மாலை யவர்

து

என்று பாராட்டப்பட்டவர்! உழுதுண்டும், உழைத்துண்டும் வாழ்வார்! அவர்க்கு முறை செய்து காப்பாற்ற வாய்த்ததே இறைமைப்பண்பு! இயற்கை செயற்கை விளைவுகளால் உழைப்பார் துயர் உறுவராயின் அத்துயரைத் தான் தாங்கி முறை காப்பதும் இறைமை (ஆட்சி)யர் கடனே!

இவ்வகையால் குடிவாழ்வார் தம் கடமையையும் ஆட்சி புரிவார் தம் கடடையையும் உணர்ந்து பாடுபடின் ஒப்புரவு சிறந்து ஓங்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். உழைக்கும் மக்களும் அரசும் தத்தம் கடனுணர்ந்து உலகக் காவற்கடன் மேற்கொண்டாலே ஒப்புரவு வெல்லும் என்பதை உறுதியாணை யாக்குவது உலகக் குறளின் உயர்முடிவாகும்.

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்

என்பது செங்கோன்மைக் குறள்.

(547)