உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஈகை ஒப்பு

'இன்பம்' என்ற அளவில் பலர்க்கும் பலப்பல தோற்றும். பொதுவகையில், மனநிறைவும் மகிழ்வும் தருவன வெல்லாம் ன்பம் என்றே குறிக்கப்படும்.

'இன்பம்' என்பது தானே நுகரும் இன்பம் என்றும் தானும் பிறரும் துய்க்கும் இன்பம் என்றும், தருவாரும் பெறுவாரும் ஒப்ப உவகையுறும் இன்பம் என்றும் இன்பப் பெயரால் துன்பம் ஆக்கும் இன்பம் என்றும் பலப்பல பாகுபாடுகளைச் செய்யலாம்.

இவ்வின்பங்களில் அகத்தளவில் அமையும் இன்பம், புறத்தே புகலும் இன்பம் என்ற வகைமையும் உண்டு.

திருவள்ளுவரோ இவ்வின்பத்தைத் தனி ஆய்வாகக் கொள்ளும் அளவில் நூல் செய்துள்ளார்.

இன்ப வரவு எப்படி இருக்க வேண்டும் என்பதை,

66

"அறத்தான் வருவதே இன்பம்" என்பார்.

அதன் தருதலும் பெறுதலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை,

“ஈத்து உவக்கும் இன்பம்" என்பார்.

ஓர் இன்பத்தின் வரவு அறவழியில் வருவதாக வேண்டும் என்பதும்,

ருக்க

தருவார்க்கும் - பெறுவார்க்கும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதும் அவர்தம் உட்கிடையாம்.

"ஈத்து உவக்கும் இன்பம்" என்பது விளக்கம் பெற வேண்டிய தொடர். எவர்க்கு ஈத்து உவக்க வேண்டும் என்று காண்பது அவ்விளக்கமாம்.

தொகுத்துக் கூறும் அவரே விளக்கிக் கூறலும் புரிவார் என்பது குறளை முழுதுற ஓதினார் அறிவதேயாம். அவ்வகையில்

""

“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

(221) என்றும்,